24 special

அண்ணாமலை இன்று பேசியதில் இந்த "விஷயம்தான்" திமுகவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாம் !

annamalai and stalin
annamalai and stalin

தமிழக பாஜக சார்பில் இன்று சென்னையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தது போன்று மாநில அரசும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என பேரணி நடத்தப்பட்டது, இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, H. ராஜா, பாஜக துணை தலைவர்கள் சசிகலா புஸ்பா, VP.துரைசாமி மாநில செயலாளர் வினோஜ் இன்னும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் ஆளும் திமுகவை மையப்படுத்தி அண்ணாமலை பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார் ஆனால் இவை அனைத்தையும் தாண்டி அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பேசிய வார்த்தைதான் ஆளும் திமுகவை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.

அண்ணாமலை பேசியதாவது தேர்தல் வாக்குறுதியில் சொல்லாமலே இரண்டு முறை பெட்ரோல் - டீசல் வரியை மோடி அரசு குறைத்துள்ளது..ஆனால் கொட்டை எழுத்துக்களில் எவ்வளவு விலை குறைப்போம் என எழுதி மக்களிடம் வாக்கை கேட்டு ஆட்சி வந்தார்களோ அதைக் கூட குறைக்க மறுக்கிறது திமுக அரசு..

அழுத்திக் கேட்டால் தேர்தல் அறிக்கையை  எழுதிய டி.ஆர் பாலுவிடம் கேளுங்கள் தளபதியை கேட்காதீர்கள் என விஞ்ஞானபூர்வ விளக்கத்தை ஆர்.எஸ்.பாரதி தருகிறார்..விரைவில் மு.க.ஸ்டாவினுக்கு பதிலாக அண்ணன் டி.ஆர்.பாலு முதல்வராக பதவியேற்றுக் கொண்டால் நாங்கள் அவரிடம் கேட்கிறோம்..தனக்கு ராஜ்யசபா பதவி கொடுக்கவில்லை என்ற கடுப்பில் முதல்வர் பதவியை மாற்ற நினைக்கிறார் போல ஆர்.எஸ்.பாரதி என ஆர். எஸ் பாரதி கருத்துக்கு வேட்டு வைத்துவிட்டார் அண்ணாமலை.

வழக்கமாக திமுகவினர்தான் இது போன்று கேள்வி எழுப்பியவரை சிக்கலில் உண்டாக்கும் விதமாக கருத்து தெரிவிப்பார்கள் ஆனால் இந்த முறை திமுக பாணியை பாஜக கையில் எடுத்து ஆர்எஸ்பாரதியை விமர்சனத்திற்குள் தள்ளி விட்டு இருப்பது  பெரும் பின்னடைவை திமுகவிற்கு கொடுத்துள்ளது.