World

#BREAKING இலங்கை மலேசியாவை தொடர்ந்து கனடா நாட்டிலும் களமிறங்கிய ரா? தோல்வியின் முகத்தில் கனடா பிரதமர் ட்ருடோ

Canada pm
Canada pm

உலக நாடுகளின் கவனம் தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து மெல்ல விலகி தற்போது, கனடாவின் மீது விழுந்து வருகிறது, வருகின்ற கனடா பிரதமர் தேர்தலில் அந்த நாட்டில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, கனடா பிரதமரின் ஆட்சி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த போதும், கூட்டணி கட்சிகள் நெருக்கடி காரணமாக உடனடியாக தேர்தலை அறிவித்தார் ட்ருடோ.


இலங்கையில் ராஜபக்சே தேர்தலை முன் கூட்டியே சந்தித்து எதிர்ப்பை குறைக்கலாம் என கணக்கு போட்டு அதிபர் தேர்தலை சந்திக்க, அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற சிறிசேனா ராஜபக்சேவிற்கு எதிராக அதிபர் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார், இதன் பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பு செயல்பட்டதாகவும், பல்வேறு எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ராஜபகசேவிற்கு எதிராக சிரிசேனாவை வலிமை படுத்தியது இந்தியாவின் உளவு அமைப்பான ரா தான் என அப்போதே ராஜபக்சே ஆதரவாளர்கள், கட்சியினர் பேட்டியே கொடுத்தனர்.

தீவிர சீன ஆதரவாளராக அறியப்பட்ட ராஜபக்சேவை வீழ்த்தி, இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுவர இந்திய உளவு அமைப்பு இலங்கையில் வேலை செய்ததாக கூறப்பட்டது, அதற்கு வலு சேர்க்கும் விதமாக, இலங்கை சீனாவுடன் போட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார் சிறிசேனா, இவை தவிர்த்து காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்தது.

இதனை அப்போது மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது கடுமையாக எதிர்த்தார், மேலும் இந்திய அரசாங்கம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார், அத்துடன் இந்தியாவில் இருந்து தப்பி சென்ற ஜாகிர் நாயிக்கிற்கு எந்த இஸ்லாமிய நாடுகளும் அடைக்கலம் கொடுக்காத போது, மகாதீர் முகமது அடைக்கலம் கொடுத்தார்.

காலம் காலமாக இந்தியா மலேசியா உறவு சீராக சென்று கொண்டு இருந்த போது, மகாதீர் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட்டது, நமது உளவு அமைப்புகளையும், அரசாங்கத்தையும் கொதிப்படைய செய்தது, இந்நிலையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு தடை விதித்தது மத்திய அரசு.

மலேசியாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது பாமாயில் அதனை அதிக அளவில் வாங்கும் நாடு இந்தியா நிலைமை இப்படி இருக்க, மலேசியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது, வீராப்பு பேசிய மகாதீர் இந்தியாவை பகைத்து கொள்ளும் அளவிற்கு நாங்கள் பெரிய நாடு இல்லை பாமாயில் இறக்குமதியை வழக்கம் போல் இந்தியா தொடங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார் ஆனால் இந்தியா அதனை ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து உள்கட்சி, கூட்டணி, தொழிலதிபர்கள் என பலரும் மகாதீர் முகமதுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பதவியை ராஜினாமா செய்தார். இதற்கும் இந்தியா தான் காரணம் என கூறப்பட்டது. இந்த சூழலில் இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், விவசாய சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதரவு தெரிவித்தார்.

இது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட கூடாது என மத்திய அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தனர், இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குழுவினர் காலிஸ்தான் குழுவினருக்கு ஆதரவு பண உதவிகள் செய்வதாகவும், அதற்கு கைமாறாக கனடாவில் வாழும் சீக்கிய சமுதாய வாக்குகள் ஜஸ்டின் டிரடோவிற்கு விழும் என கணக்கு போட்டு காய் நகர்த்தி வந்துள்ளனர்.

இந்த சூழலில் தான் கனடா எதிர்க்கட்சிக்கு நமது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஏற்கனவே கனடாவை சீனாவிடம் ட்ருடோ அடகுவைத்து விட்டார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவர இந்தியாவின் உளவு அமைப்புகளும் சீக்கிய மதத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளை கனடாவின் தற்போதைய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக திருப்பி வருவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையின்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் போராட்டம் நடத்தினர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வார காலமே உள்ள நிலையில், ட்ரூடோ மீது கல் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கனடாவில் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என சில வாங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு முன்பு ட்ரூடோவுக்கு சாதகமாகவே சூழல் இருந்தது. குறிப்பாக, அப்போது வெளியான கருத்துக்கணிப்புகளில் லிபரல் கட்சி தலைவர் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் எரின் ஓ டூலை ஒப்பிடுகையில் முன்னிலையில் இருந்தார்.

ஆனால் தற்போது ஜஸ்டின் ட்ருடோ தோல்வியை தழுவுவார் என்றே அந்த நாட்டின் முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் உளவு அமைப்பான ரா உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக கருத்தப்படுவது ஏன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.