செய்தியாளர் சந்திப்பில் புதிய ஆளுநர் நியமனம் சந்தேகத்தை எழுப்பி இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார் இது குறித்து அவர் பேசியதாவது : -உளவுத்துறையோடு சுலபமாக தொடர்ப்பில் உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அரசானது இன உணர்வையும், மொழி உணர்வையும் அழிக்கக் கூடிய ஒருவரை ஆளுனராக நியமித்து உள்ளது.
ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை ஆளுனராக பணியமர்த்த வேண்டும் என்ற அவர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களால் ஆட்சியை கலைக்க முடியாது என திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில் திருமாவளவன் கருத்திற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார் அவர் தனது முகநூலில் தமிழக புதிய ஆளுநரை திரும்பப்பெற வேண்டும். உளவு துறையில் பணியாற்றியவர் என்பதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : திருமாவளவன்.
உளவுத்துறையில் பணியாற்றியவரை கண்டு திருமாவளவன் அஞ்சுவது எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக நம் சந்தேகத்தை உறுதி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார், தமிழகத்தின் புதிய ஆளுநர் நியமனம் திமுக கூட்டணி கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது மட்டும் பலரது அறிக்கை பேட்டியின் வாயிலாக தெரியவந்துள்ளது.