Tamilnadu

#BREAKING லஞ்ச "ஒழிப்பு" துறைக்கு உத்தரவிடுகிறார் ஆளுநர் கடும் பீதியில் ஆளும் அமைச்சர்கள்..!

Rn ravi
Rn ravi

தமிழக ஆளுநரை ஆளும் கட்சியான திமுக சீண்ட சீண்ட ஆளுநர் தரப்பில் பதிலடிகள் உடனுக்குடன் கிடைத்து வருகின்றன, டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்த திமுக தலைமையிலான நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்.பாலு முதன் முதலில் தமிழக ஆளுநரை திரும்பபெறவேண்டும் என கோரிக்கை வைத்தார்.


குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் அதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் கடுமையாக குரல் கொடுத்தார், இதற்கு ஆளுநர் தரப்பில் அப்போது எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை மாறாக பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தார்.

இது ஆளும் அரசிற்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தங்களது அதிகார பூர்வ பத்திரிக்கையில் இது நாகலாந்து அல்ல தமிழ்நாடு என ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்தது திமுக, இந்த சூழலில்தான் நேற்றைய தினம் நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக இருப்பதாக குறிப்பிட்டு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் என ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது திமுகவின் நீட் விலக்கு கனவில் மிக பெரிய அடியாக பார்க்க படுகிறது குறிப்பாக நீட் தேர்வு மீது தற்போது தமிழக மக்களுக்கு உண்மை தெரிந்துள்ளது என்றும் நீட் தேர்வால் தற்போது பல ஏழை கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் சூழல் உண்டான காரணத்தால் ஆளுநர் அதிரடியாக திருப்பி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டுக்கு தாடியும் நாட்டிற்கு ஆளுநரும் எதற்கு என அண்ணா கேட்டது நினைவிற்கு வருகிறது என ட்விட்டரில் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார் ஸ்டாலின். இந்த சூழலில் ஆளுநர் தற்போது தமிழக அமைச்சர்கள் மீது எழுந்துள்ள ஊழல் குற்றசாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநருக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட சிறப்பு அதிகாரம் உள்ளது எனவே அதன் அடிப்படையில் ஆளும் அமைச்சர்கள் மீது முதலில் வழக்கு பதிவு செய்யபட்டால், பின்பு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என பலத்துறைகள் களத்தில் இறங்கும் வாய்ப்புகள் இருப்பதால் தற்போது ஆளும் அமைச்சர்கள் பலர் கடும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

தீபாவளிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்குவதில் டெண்டர் முறைகேடு புகார், பொங்கல் பரிசு பொருட்கள் நியாயவிலை விலை கடைகளுக்கு கொள்முதல் செய்ததில் ஊழல், பல்வேறு துறைகளில் டெண்டர்கள் வழங்குவதில் ஊழல் என பல குற்றசாட்டுகள் இருக்கும் சூழலில் ஆளுநர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டால் அதில் பல்வேறு விவகாரங்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More watch videos