நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் சட்ட சபை தலைவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ம அதில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திரும்ப அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. எனவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதியே தமிழக அரசிற்குP விளக்கப்பப்பட்டுள்ளது" என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சூழலில் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
தமிழக சட்டமன்றத்தில் நீட் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேதகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சரியான, பாராட்டத் தக்க நடவடிக்கை. ஆளுநர் முன்பாக 2 options உண்டு. ஒன்று உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்புவது அல்லது பந்தை ஜனாதிபதி மாளிகைக்கு தள்ளிவிட்டு தன் பெயரை காப்பாற்றிக் கொள்வது.
மேதகு ஆளுநர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்பியுள்ளார்.இது நேர்மையான, சட்டரீதியிலான செயல். தட்டிக் கழிக்க எண்ணாமல் துணிச்சலாக செய்துள்ளார்.சட்டம் 2 வகைப்படும். ஒன்று பாராளுமன்றம், அல்லது சட்டமன்றத்தால் இயற்றப்படுபவை. மற்றொன்று நீதிமன்றங்களின் தீர்ப்பு. தமிழகத்தில் உச்சமன்ற தீர்ப்பின் மூலம் நீர் செயலாக்கத்தில் உள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தீர்மானம் சட்டப்படி செல்லாது. It is void ab initio.
எனவே இனியாவது தமிழக திராவிடியன் ஸ்டாக் அரசு எதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுப்பது மட்டுமே ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தன்னை திராவிடன் ஸ்டாக் என குறிப்பிட்ட நிலையில் அதையே குறிப்பிட்டு கிண்டல் அடித்துள்ளார் H.ராஜா.
More Watch videos