சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பூதாகரமாக வெடித்தது. தமிழ் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் முகம் சிவந்து திமுக அரசுக்கு எதிரான கேள்விகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனை அடுத்து 2026 என்னுடைய வாக்கை திமுக அல்லாமல் வேறு கட்சிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்ற வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூறியிருந்தார். இதனை அடுத்து நீலம் பண்பாட்டு அமைப்பின் சார்பாக ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை இயக்குனர் பா ரஞ்சித்தே தலைமையேற்று சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி தலித் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் திடீரென்று பேரணி நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக திருமாவளவன் முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசும்பொழுது, கூலியை பெற்றுக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக்கொண்டிருக்கின்ற அரசியல் அறியாமையின் உலர்கிற அர்ப்பர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுகவிற்கு எதிராக என்று கூறுவதை விட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இயக்க தோழர்கள் புரிந்து கொண்டு கட்சி சாராத நினைவுகள் பேரணியில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டார். இது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியது. ஏனென்றால் தலித் மக்களின் குரலாக இயங்கி வருகிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்பட அதற்கேற்ற வகையிலே பா ரஞ்சித் தலித் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் பேரணியை நடத்தியது அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பெருமளவில் விமர்சனத்தை பெற்றது.
அதுமட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்து பேசினாள் பி டீம் என்று கூறுகிறார்கள். நான் என்ன பணத்திற்காக கூடிய கூட்டமா? நம் உரிமைகளை நம் கேள்விகளை முன்வைக்க ஒன்று கூடினால் நம்முடைய அண்ணன் அவர்களே நமக்கு எதிராக திருப்புகிறார்கள்! நாங்கள் ஒருபோதும் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக திரும்பப் போவதில்லை என்று கூறிய ரஞ்சித் பிறகு அம்பேத்கர் அவர்கள் போராடி பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டு தற்போது அமைச்சர்களாகவும் அதிகாரிகளாகவும் உள்ளவர்கள் ஏன் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்கிறீர்கள் என்று மீண்டும் திருமாவளவனை குறி வைத்து கேள்விகளை முன் வைத்தார் ரஞ்சித். இது ஒட்டுமொத்த சினிமா மற்றும் அரசியல் உலகை பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் தொடர்ச்சியாக ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தில் நாங்கள் தலித் மக்கள் எங்களுக்கு தான் இப்படி நடக்கிறது எங்களுக்கு குரல் கொடுத்து யாரும் இல்லை என்று ஒரு சார்ந்த மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற பா ரஞ்சித் தனது திரைப்படத்திற்கு மட்டும் ஏன் அனைத்து சமூக மக்களும் சேர வேண்டும் என்று நினைக்கிறார், சமீபத்தில் கூட அவரது இயக்கத்தில் தாங்கலான் திரைப்படம் வெளியாக போவதாக செய்திகள் வெளியானது.
தாங்கலான் திரைப்படத்தை தலித் மக்கள் மட்டும் பார்க்க வேண்டும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என்று அவரால் கூற முடியுமா? அவர் என்ன தேசிய தலைவரா திருமாவளவன் ஒரு கருத்தை வேறு விதத்தில் கூறினால் அது தனக்கென்று நினைத்து கொண்டு மேடையில் ஏதோ அரசியல்வாதி போன்ற பேசுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதோடு இதன் மூலம் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான உள்ள தாங்கலான் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைந்திருப்பதாகவும் தனது நடவடிக்கைகள் மூலமே படத்தை இவர் தோல்வி பாதையில் கொண்டு செல்கிறார் என்றும் சினிமா விமர்சகர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மேலும் இந்தமுறை பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தை திமுக, விடுதலை சிறுத்தைகள் போன்றவர்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது...