கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானையும் அவரது கட்சி நிர்வாகிகளையும் மையமாக வைத்து சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தையும் பாஜகவின் முன்னால் நிர்வாகியும் பாஜகவில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தான் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் சாட்டை துரைமுருகன், தம்பி அன்னைக்கு ஒரு விஸ்கி கொடுத்தல்ல அந்த போட்டோ எடுத்து அனுப்பு என்று யாருக்கோ அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்ஜை வைத்து வடிவேலுவின் காமெடி ஜோக்ஸோடு எடிட் செய்து அந்த வீடியோவையும் ஆடியோவையும் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் திருச்சி சூர்யா சிவா. இது பெருமளவில் விமர்சனங்களை பெற்றது ஏனென்றால் மேடைகள் தோறும் மதுவுக்கு எதிராக கடுமையாக பேசி வருகின்ற சாட்டை துரைமுருகன் இப்படி விஸ்கி கேட்டு இருப்பது பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியாகிய இரண்டு நாட்களுக்கு பிறகு சாட்டை துரைமுருகனுக்கு இயக்குனர் அமீர் அனுப்பிய நான்கு நிமிடம் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்ஜை வெளியிட்ட திருச்சி சூர்யா. அதில், சாட்டை துரைமுருகன் புதிதாக பிறக்கின்ற அலுவலகத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அந்த அலுவலகத்தில் என்னால் வர இயலாது ஏனென்றால் நாம் தமிழர் சகோதரர்கள் சிலர் நான் வருவதை விரும்புவதில்லை நான் ஏதோ விரோதி போன்று பார்க்கிறார்கள் நானும் என்னுடைய இந்த நிலைக்கு மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன். தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சிக்கு ஒரு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறேன் நான் கட்சிக்காரன் இல்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்திருக்கிறேன். இதை அண்ணனிடம் கூறினால் மனதில் வைத்துக் கொள்ளாதே என்று கூறிவிட்டு அவர் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விடுவார்.
அவ்வளவுத்தையும் சகித்துக் கொண்டு கஷ்டப்பட்டு முன்னேறி வந்த என்னை ஜாபர் ஒருத்தன் மீண்டும் அகல பாதாளத்தில் தள்ளிவிட்டான், அதிலிருந்து நான் முன்னேற பார்க்கும் நேரத்தில் மீண்டும் நாம் தமிழர் தம்பிகளெல்லாம் என்னை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் அது எனக்கு சங்கடமளிக்கிறது என்று மிகவும் வருத்தத்துடனும் தனது வேதனையை கூறியிருந்தார். இந்த ஆடியோவும் பெருமளவு சர்ச்சை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 18ஆம் தேதி சீமானின் குரலில் திருச்சி சூர்யா ஒரு ஆடியோ வெளியிட்டார். அந்த ஆடியோவில் ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜோதிட ஆலோசனைகள் கூறியவரும், தற்போது அதிகார வர்க்கத்திற்கும் நெருக்கமான ஜோதிடர் ஒருவராக அறியப்படுபவரிடம் சீமான் பேசும் பொழுது இன்னும் ஒரே ஒரு பிசிறு இருக்கு காளியம்மா, அப்புறம் சிவசங்கரன் ஒரு பிசிறு இருக்கு, இரண்டையும் தட்டிட்டால் சரியாகி விடும் என்று பேசியுள்ளார். இது நாம் தமிழர் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர்களிலேயே காளியம்மாள் ஒரு முக்கிய பேச்சாளர் ஆவார் அவரது வீடியோகள் அனைத்துமே பல பார்வையாளர்களை அள்ளித் தட்டிச் செல்லும் பொழுது அவரை ஒரு பிசிரு என்றும் அவரை தட்டி தூக்க வேண்டும் என்ற வகையிலும் சீமான் பேசியுள்ள ஆடியோ வெளியிடப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சிகளுக்கு உள்ளே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும் இதற்கு அடுத்து நடந்த போராட்டத்தில் காளியம்மாள் கலந்து கொண்டார். எப்படி இவர்கள் கலந்து கொண்டார் என்று விசாரிக்கும் பொழுது, தேவேந்திரன் தொலைபேசியில் அழைத்து காளியம்மாளை சமாதானம் செய்ததாகவும் அண்ணன் உங்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறார் வரும் செய்திகளை நம்பாதீர்கள் என்று சமாதானம் செய்ததாலேயே அவர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஆனால் சீமான் தன்னுடைய பிசுறு பேச்சிற்காக காளியம்மாளிடம் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படியே சென்றால் நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகள் மற்றும் நிர்வாகிகளின் அதிருப்திகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த விஷயத்தில் சீமான் மிகவும் அலட்சியத்தோடு இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.