தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்திருந்தாலும் திமுகவிற்கும் மேயர் பதவிக்கும் இடையே தொடர்ந்து புகைச்சல் இருந்த வண்ணமே உள்ளது. மேயர் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவிற்கும் மேயர் பதவிக்கும் இடையே பிரச்சனை ஆனது தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது. முதலில் நெல்லையில் அதிக தொகுதிகளில் திமுக வேட்பாளர் வென்ற போதிலும் மேயர்பதவிற்கு பெருமளவிலான போட்டி காணப்பட அதற்குப் பிறகு சென்னை மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரான அப்துல் வஹாப் ஆதரவாளரான சரவணன் மேயராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் இவர்கள் இருவருக்குமே பிறகு மோதல் ஆரம்பித்து, பின்னர் கவுன்சிலருக்கும் மேயருக்கும் இடையேவும் பிரச்சனைகள் பெரிதாக வெடித்து மேயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து அறிவாலயத்திற்கு கடிதத்தையும் அனுப்பினர். அதுமட்டுமின்றி நெல்லை நேருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அறிவாலய தலைமை எவ்வளவோ முயற்சித்தும் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியவில்லை.
நெல்லையை தொடர்ந்து கோயம்புத்தூரிலும் இதே நிலைதான் திமுகவிற்கு ஏற்பட்டது. கோவை மேயரான கல்பனா ஆனந்தகுமார் தனது தனிப்பட்ட காரணங்கள் மற்றும் உடல்நிலை காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார். இருப்பினும் கல்பனாவின் இந்த திடீர் ராஜினாமா கடிதத்திற்கு பின்னால் சதி இருக்கிறது என்ற பேச்சும் எழுந்தது. இந்த வரிசையில் காஞ்சிபுரம் இணைந்து விடுமோ என்ற ஒரு பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி வந்த நிலையில் தற்போது அதுவும் உறுதியாகும் நிலையை தொட்டுள்ளது.. அதாவது காஞ்சிபுரத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 51 வார்டுகளில் 32 இடங்களை திமுக பிடித்தது.
இதனை அடுத்து திமுக தலைமை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரின் ஆதரவாளரும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான யுவராஜின் மனைவி மகாலட்சுமியை வேட்பாளராக நிறுத்தியது. நெல்லை கோவை போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை போன்று காஞ்சிபுரத்திலும் மேயர் தேர்தல் ஆரம்பித்தில் இருந்தே திமுகவிற்கு உள்ளே கடுமையான போட்டி நிலவியது.
அதுமட்டுமின்றி மேயருக்கு ஆணையராக நியமிக்கப்பட்ட கண்ணன் என்பவருக்கும் மேயிருக்கும் இடையேயும் பல பிரச்சனைகள் வெடிக்க மாநகராட்சி ஆணையராக இருந்த கண்ணனை மாற்றிவிட்டு செந்தில்குமாரை ஆணையராக தலைமை நியமித்தது. ஆனால் செந்தில்குமார் மேயருக்கு ஆதரவாகவே செயல்படுகிறார் என்ற ஒரு பிரச்சனையும் இதன் தொடர்ச்சியாக எழுந்தது. அதுமட்டுமின்றி செந்தில்குமார் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்றும் அவற்றை மேயரும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் 33 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து மாவட்ட கவுன்சிலர்களை சமாதானப்படுத்துவதற்காக கே என் நேருவே அங்கு சென்று சமாதானம் பேசியும் வேலைக்காகாமல் கவுன்சிலர்கள் விடாப்படியாக குறிப்பாக திமுக கவுன்சிலர்கள் விடாப்பிடியாக நின்று திமுகவின் மேயராக உள்ள மகா லட்சுமியை நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானம் வேண்டும் என்று உறுதியாக நின்று மனு அளித்தனர். அதுமட்டுமின்றி மாநகராட்சி ஆணையர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அளித்த மனு மீதான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆட்சியரிடம் புகார் அளிக்க, நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் கவுன்சிலர்கள் தடாலடியாக கூறியதை அடுத்து காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த மனு ஜூலை 29ஆம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போதைய நிலவரப்படி 34 பேர் மேயருக்கு எதிராக இருப்பதாகவும் இன்னும் ஏழு பேரை மேயருக்கு எதிராக திருப்பும் நடவடிக்கைகளில் சில கவுன்சிலர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகமொத்தம் நெல்லை, கோவை வரிசையில் தற்போது காஞ்சிபுரம் இணையுள்ளது என்பது திமுக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.