Tamilnadu

யாரும் எதிர்பாராத புது வழியில் அட்டாக் மோட் ஆரம்பித்த பாமக சூர்யா தரப்பு கடும் அதிர்ச்சி!

pmk protest
pmk protest

நடிகர் சூர்யா தரப்பிற்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்த பாமக இந்த முறை சட்ட ரீதியாகவும் அதே நேரத்தில் வருமானத்தை பாதிக்கும் விதமாகவும் ஒரு சேர புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.  இது குறித்து நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.


ஒன்று சட்ட ரீதியான செயல்பாடு : ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாமக வழக்கறிஞர் பாலு மத்திய மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதம் ஒட்டுமொத்த திரைப்பட துறையையும் ஆட்டம் கான வைத்துள்ளது , பாமக வழக்கறிஞர் பாலு மத்திய மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட சில தகவல்கள் பின்வருமாறு.

தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள வன்னியர் சமூக மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதே வன்னியர் சங்கம். இந்த சங்கத்தின் சின்னமாக அக்னி குண்டம் திகழ்கிறது. இந்த சின்னம் பல நூற்றாண்டுகளாக வன்னியர் சமூகத்தினர் செய்த தியாகத்தை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த சின்னம் பொருந்திய நாட்காட்டியானது,ஜெய்பீம்’ திரைப்படத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றிருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது வன்னியர் சங்கம் மற்றும் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

அதுமட்டுமின்றி அந்த காவல் உதவி ஆய்வாளரின் பெயரை ’குரு’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பெயர் வன்னியர் சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவருடையது. இதன்மூலம் வன்னியர் சமூகத்தினர் தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பது போல் சித்தரித்துள்ளனர். இவை அனைத்தும் எதிர்பாராத வகையில் நடந்தது தெரியவில்லை.

வேண்டுமென்றே திட்டமிட்டு ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி தரும் வகையில் செயல்பட்டது போல் தெரிகிறது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர்,

அமேசான் நிறுவனம் ஆகியவற்றிற்கு 15.11.2021 அன்று சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். இந்நிலையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும், விருதும் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

விருது வழங்கி மேலும் இந்த விவகாரத்தை மத்திய மாநில அரசுகள் சிறந்த படமாக கருத கூடாது என ஜெக் வைத்து இருக்கிறது பாமக,  இது சட்ட ரீதியான நடவடிக்கை என்றால் மற்றொரு புறம் பாமக செய்துள்ள. செயல்பாடுதான் உண்மையில் சூர்யாவை மட்டுமல்ல சூர்யா குடும்பத்தையே அதிர செய்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அவரது சட்டமன்ற உறுப்பினர் அதிகாரபூர்வ பக்கத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சினிமா திரையரங்கு விநியோஸ்தர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார், அதில் ஜெய்பீம் திரைப்படம் மூலமாக சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் கொந்தளிப்பில் உள்ளதால்..,


இனி வரும் காலங்களில் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் படத்தினை திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என சுற்று அறிக்கையே அனுப்பியுள்ளார், இது ஒட்டுமொத்த சிவகுமார் குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கார்த்தியின் சர்கார், பொன்னியின் செல்வன், சூர்யாவின் நான் ஏதற்கும் துணிந்தவன், ஜோதிகா நடித்து வரும் புது படங்கள் ஆகியவற்றின் நிலை என்ன ஆகும் என்ற கடும் கவலையில் சூர்யா குடும்பத்தைமட்டுமல்ல சூர்யா குடும்பத்தை நம்பி பணம் போட்டு திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

பாமக போராட்டம் ஆர்ப்பாட்டம் என நினைத்து இருந்த சூர்யா தரப்பிற்கு பாமகவும் வன்னியர் சங்கமும் சட்ட ரீதியாகவும், வியாபார ரீதியாவும் சூர்யா குடும்பத்தின் மீது கைவைத்த சம்பவம் ஒட்டுமொத்த சூர்யா ஆதரவாளர்களையும் நிலை குலைய செய்துள்ளது.