Tamilnadu

"எல்லையில் போர் மேகம்" ஏன் விவசாய சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றார் பிரதமர் பிரபல எழுத்தாளர் தீர்க்கமான கருத்து!

modi
modi

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்திருத்தம் முழுவதும் திரும்ப பெறுவதாக பிரதமர் இன்று காலை அறிவித்தார் இந்த சூழலில் பிரதமர் ஏன் அவ்வாறு முடிவு எடுத்தார் என பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார், அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-


எல்லையில் போர்மேகம் சூழ்ந்திருக்கும் நேரம் இந்திய ராணுவத்தில் அதிகம் இருக்கும் சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இருப்பது சரியல்ல‌ இன்னும் யுத்தம் என வெடித்தால் உள்நாட்டு பாதுகாப்பினை உறுதிசெய்ய முன்னாள் ராணுவத்தாரை அழைக்கும்பொழுது சீக்கியர்கள்தான் அதிகம் வருவார்கள்

இந்திராகாந்தி செய்த பெரும் தவறு சீக்கியர்களை கிள்ளுகீரையாக நினைத்து மிரட்டி ராணுவத்தை ஏவியது, மோடி அந்த தவறை செய்யாமல் அவர்களை பக்குவமாக அரவணைத்து செல்கின்றார்.இது இப்பொழுது மோடிக்கு பின்னடைவு என்றாலும் பிரிதொரு நாளில் இச்சட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது அவருக்கு தெரியும்

இந்திரா செய்த பெரும் தவறை செய்யாமல் நாட்டுக்காய் வாழும் சீக்கிய இனத்தின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்திருக்கும் மோடியின் நல்லாட்சி நிச்சயம் வாழ்த்துகுரியது இந்த அரசு கொண்டுவந்த வேளான்மை சட்டங்களின் 3 பிரிவு அதாவது பஞ்சாப் சீக்கிய விவசாயிகள் எதிர்க்கும் அந்த சட்டம் ரத்து செய்யபடுவதாக மோடி தெரிவித்துள்ளார்

இது குருநாணக் ஜெயந்தி அன்று சீக்கியர்களுக்கு மோடி தெரிவித்திருக்கும் நற்செய்தி, அதுவும் சரியாக இந்திரா பிறந்த நாளில் சொல்லி காங்கிரஸ் போல் பாஜக பிடிவாத சர்வாதிகார ஆட்சி அல்ல, ராணுவத்தை அனுப்பி சர்வாதிகாரமாக நசுக்கும் கட்சி இது அல்ல என நிரூபித்திருக்கின்றார் மோடி

அவருக்கு வாழ்த்துக்கள், இது பஞ்சாபியரிடையே பாஜகவினை வளர்க்கும் இனி அம்ரீந்தர்சிங் பாஜகவுக்கு வரவும் தடை இராது மோடி வீரசிவாஜியின் சாயல் , அந்த மோடிஜி சிவாஜிக்கு அவர் குரு தாதாஜி சொன்ன அந்த வார்த்தைகளை மெய்பித்திருக்கின்றார் "சிவாஜி ஆட்சியில் ஆயிரம் சிக்கல் வரும், சில விட்டுகொடுப்புகளை செய்யாமல் அரசியல் இல்லை. எல்லா விஷயமும் வெற்றிபெறும் என எண்ணாதே அது நடக்காது.

சில விவகாரங்களில் விட்டு கொடுத்தல் அவசியம், குடிகளிடம் வீண் வதந்தியும் பதற்றமும் பரவி நாட்டில் குழப்பம் நிலவுமானால் நீ பின்வாங்க தயங்காதே, சில இடங்களில் பின்வாங்குவது ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது

உன் பிடிவாதத்தையும் விடாத போராட்டத்தையும் எதிரியிடம்தான் காட்ட வேண்டும், சொந்த மக்களிடம் விட்டு கொடுக்கவும் இறங்கி செல்லவும் தயங்காதே, அவர்களுக்காகத்தான் நீ ஆளுகின்றாய் என்பதை மறக்காதே"

மோடி மிக சரியாக மிக நிதானமாக மிக சரியான காரணத்தை மிக சரியான நேரம் செய்திருக்கின்றார், இது விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி என சொல்லமுடியாது, சில விஷயங்களை அனுபவிக்கட்டும் என சொல்லி அவர்கள் போக்கிலே சென்று திருப்பி எடுக்க வேண்டும் அது ஒரு ராஜதந்திரம்

இனி அவர்களாக வரும்வரை விட்டுவிடலாம் , குருநாணக் பிறந்த நாளில் சுமார் 16 மாத பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவந்திருக்கின்றார் மோடி, ரத்தமின்றி யுத்தமின்றி பொற்கோவில் சம்பவமின்றி அமைதியாய் பிரச்சினையினை முடித்திருக்கும் அந்த தெய்வமகனுக்கு வாழ்த்துக்கள் என அழுத்தம் திருத்தமாக  தனது கருத்தை பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.