24 special

காட்டுக்கு நடுவில் பண்ணாரி அம்மன் மர்மங்கள்...

pannaiyamman temple
pannaiyamman temple

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் விசாலமாக பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளது. இக்கோவிலிருந்தே திம்பம் மலைப்பாதை ஆரம்பமாகும் அதனால் மலைப்பகுதி சுற்றிலும் கோவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகை கொண்டிருக்கும். அதோடு இக்கோவிலில் இருந்து தெற்கு சுமார் ஆறு மையில் தொலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பவானி ஆறு ஓடுகிறது, கோவில் அருகே புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது அதனால் இந்த பகுதி மிகச் சிறந்த சுற்றுலா தளமாகவும் அதிக சுற்றுலா பயணிகளையும் கொண்டது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஒரு வெளிச்சமாக இருப்பது போன்று பண்ணாரி அம்மன் இக்கோவில் கம்பீரமாக காட்சியளிப்பது கோவிலிற்கு செல்லும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விடும் ஏனென்றால் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பண்ணாரி அம்மன் அனைத்து ஊர்களையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் வழிபடப்பட்டு வரப்படுகிறது.


எப்படி இந்த அம்மன் இந்த பகுதியை அடைந்தார் என்ற புராணக் கதையும் வரலாறாக அமைந்துள்ளது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு பழங்காலத்தில் சலவை தொழில் செய்யும் தம்பதி தங்கள் வேலையை செய்வதற்காக சலவை துணிகளை எடுத்துக்கொண்டு ஒரு பெரிய மழையின் கீழ் அமைந்திருக்கும் ஆற்றிற்கு கொண்டு சென்று அவற்றை சலவை செய்ய ஆரம்பித்தனர். இதில் அப்பெண்மணி நிறைமாத கர்ப்பிணி! சலவை துணிகளை துவைத்து கொண்டிருக்கும் பொழுது மழை கடுமையாக பெய்ய ஆரம்பித்தது அதோடு கர்ப்பிணிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தாள் உடனே அவரது கணவர் சலவைக்காக கொண்டுவரப்பட்ட துணிகளை சுற்றி கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்தார். அந்த பிரசவத்தில் அந்த தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது அந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டுமே இவர்களால் தூக்க முடிந்தது மற்றொரு குழந்தையை தூக்க முற்பட்டும் அவர்களால் துக்க முடியாமல் அருகில் இருந்த தாழியில் அந்த குழந்தையை வைத்துவிட்டு ஊர் தலைவரிடம் சென்று நடந்த வற்றை கூறினார்.

ஊர் தலைவரும் இவற்றைக் கேட்டுக் கொண்டு ஊரில் உள்ள சிலரும் குழந்தை வைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற பொழுது அவர்களாலும் அந்த குழந்தையை தூக்க முடியவில்லை இதனால் இரும்பு கடப்பாறையை கொண்டு அந்த தாழி மூலம் குழந்தையை தூக்க முற்பட்ட பொழுது குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது, அதற்குப் பிறகு மறுநாள் காலையில் தாழியில் உள்ளே இருந்த பெண் குழந்தையை பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவமாக அம்மனே எழுந்தருளி இருந்தார். மேலும் அம்மனை கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்று கூறியதாகவும் புராணக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பிறகு ஊர் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு திருவிழா அன்று ஊர் மக்கள் அனைவரும் அப்பகுதியின் வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர் ஆனால் இந்த சலவை தம்பதிகளின் வறுமை காரணமாக புளிக்கொட்டையை இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி சென்று இருந்தால் இதனை அறிந்த அம்மன் அந்த புளிமாவிற்காக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்திருந்தார். அப்படி அம்மன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்திருப்பது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தாழியில் கடப்பாரை கொண்டு தூக்கும் போது வலது மார்பில் காயம் ஏற்பட்டதும் இன்றளவும் அந்த காயத்தை பார்க்க முடியும் என்றும் கூறுகின்றனர். மேலும் புற்று மணலே இக்கோவிலில் திருநீராக வழங்கப்படுகிறது, நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்திருப்பதால் நெடுஞ்சாலைகளில் செல்லும் பல வண்டிகளும் கோவிலின் அருகே  நிறுத்திவிட்டு அம்மனை வழிபட்டு காவலாக வரும்படி கேட்டுக் கொண்டு செல்வார்களால் இதனால் அவர்கள் நினைத்து காரியமும் எந்த ஒரு தடையும் இன்றி பாதுகாப்பாக நடந்து முடியும் என்று கூறப்படுகிறது. அதோடு இக்கோவிலில் ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் குண்டம் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாம் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் இந்த கோவிலில் ஒரே நேரத்தில் தீ மிதிப்பது இங்கு மட்டுமே நடக்கும் என்று கூறுகின்றனர் திருமண தடை, குழந்தை வரம் வேண்டும் என அனைத்தையும் இந்த அம்மன் வாரி வழங்குவதாக அம்மனின் சிறப்புகளாக கூறப்படுகிறது.