தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் தனது ரசிகர் பலத்தின் காரணத்தால் தமிழகத்தில் அரசியல் கட்சியை துவங்கினார். இதுவரை விஜயை பற்றி தான் அனைத்து பிரபலங்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் செய்தியாளர்கள் அது குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக சேவைகளை செய்த்து வருகின்றனர். இந்தநிலையில் விஜிய மீது கேரளா ரசிர்கள் அதிர்ச்சியில் இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களிடையே சிந்திக்க வைத்துள்ளதால் விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தனக்குள்ள ரசிகர்களை வைத்து விஜய் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக அறிவித்தார். இந்த நிலையில் அந்த சின்னம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக அறிவிக்கலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. அதுபோலவே விஜய் இந்த மாதம் கட்சியை அறிவித்தார். அப்போது ஊழலுக்கு எதிராகவும் சாதி, மாதத்திற்கு எதிராகவும் களம் இறங்குவதாக கூறியிருந்தார். மேலும், 2024 தேர்தலில் போட்டியிடுவதாக இல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தல்களில் விஜய் தென் மாவட்டங்களில் போட்டியிடுவார் என்பது போல் சில தகவல் வருகின்றன.
சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதால் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியை பலப்படுத்த விஜய் அறிவித்து உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மாவட்ட தலைவர்களை தாண்டி கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் 14 மாவட்டத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, கேரளாவில் உள்ள ரசிகர் மன்றத்தை கூடிய விரைவில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுத்தி கொள்ளவேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், கேரளாவில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற அங்குள்ள ரசிகர்கள் விருபாமாவில்லை என தெரிகிறது.
விஜய்யின் மக்கள் மன்றத்தின் மூலம் னால திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த மன்றத்தை அரசியல் கட்சியாக தொடங்க விருப்பமில்லை என கேரளா விஜய் ரசிகர்கள் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மக்கள் ஒரு தலைவரை சினிமாவில் இருந்து தேர்ந்தெடுப்பதில்லை மக்கள் களத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கின்றனர் என சில நாட்களுக்கு முன்பி கேரள முன்னணி நடிகர் மம்முட்டி ஒநிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனால் கேரளாவில் உள்ள ரசிகர்கள் விஜய்க்கு அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு என பாடம் எடுத்துள்ளனர். மேலும், பல இடத்தில் மன்றங்களை களைத்து வருகிறார்களாம்.
இதனால் தமிழ் ரசிகர்க்ளுக்கு அண்டை மாநிலமான சேட்டன்கள் சரியான படத்தை கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. இனியாவது தலைவர்களை களத்தில் இருந்து தேடுங்கள் மாற்றத்திற்காக சினிமாவில் இருந்து தேடினால் அவர்களும் சினிமா போலவே எல்லாத்திலும் செய்வார்கள் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இது தமிழ் ரசிகர்களுக்கு சரியான பாடம் என கேரளா ரசிகர்கள் தெரிவித்ததோடு சினிமா பிரபலத்திற்கு ரசிகர்கள் உயிரை கொடுத்தும் பல ஆயிரம் தொகை கொடுத்ததும் படம் பார்ப்பது என்பது ஏற்புடையதல்ல என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.