பள்ளி சுவரில் ஓட்டியிருந்த ஆளும் திமுக அரசின் முதல்வர் இருந்த பேனரை பள்ளி மாணவர்களே இணைந்து கிழித்தெறிந்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாகவும், மாணவர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கொருக்கை ஊராட்சி தொடக்க பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி சுவரில் திருக்குறள், நல்ல பழமொழிகள் , இலக்கியம், கவிதைகள் போன்றவை தான் இடம் பெற வேண்டும். அதற்கு மாற்றாக திமுக அரசின் பேனர்களை ஒட்டி மாணவர்களை வெறுப்புகுள்ளாகியுள்ளது திமுக அரசு.தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரத்திற்கு தடை விதித்தனர். இதுபோன்று பேனர்கள், கம்பல் நடுதல் போன்றவை வைப்பதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சமும், வெறுப்பும் ஏற்பட்டு வருகிறது. மக்களுக்கு இடையூறு செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் கட்சிகள் செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் பேனர் கலாச்சாரத்தை தமிழகத்தில் தொடர கூடாது என உத்தரவிட்டது.
அதோடு, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுவாகவே ஆளும் திமுக அரசின் மீது தமிழ்க மக்கள் அதிருப்தி அடைந்து வரும் நிலையில், தற்போது மாணவர்களும் திமுகவினர் மீது அதிருப்தி உள்ளனர் என்பதை இந்த போஸ்டரை கிழிக்கும் போது தெள்ள தெளிவாக தெரிகிறது. மாணவர்களுக்கு நல்ல அரசியல் சார்ந்த பாடங்களை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் விதைக்க வேண்டுமே தவிர இதுபோன்று அரசியல் வெறுப்பை மாணவர்கள் மனதில் விதைக்க கூடாது என தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அரசியல் என்றால் என்ன, அரசியல் மூலம் நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்று தான் ஊட்ட வேண்டுமே தவிர இதுபோன்று பள்ளி சுவரில் பேனர்களை ஓட்டி அரசியல் பயத்தை வளர்க்க கூடாது என்றும் தெரிவிக்கின்றனர்.