இந்தியாவில் அதிக ரசிகர்கள் கொண்ட போட்டி என்றால் அது மட்டைபந்துக்கு (கிரிக்கெட்) தான் தற்போது உலகக்கோப்பை போட்டி முடிந்து அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்கு காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை போட்டி இந்தியா - ஆஸ்திரேலியே அணிகள் பைனலில் மோதி ஆஸ்திரேலியே அணி கோப்பையை வென்றது. அதன் தாக்கமே ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியே வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள் அது மட்டுமே வரலாற்று சாதனையாக இருந்த நிலையில் ஏலத்தில் ஒரு பட்டியலின வீரர் ஒருவர் வாங்கியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம், நேற்று துபாயில் நடைபெற்றது. இதற்கான இறுதிப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டின. இறுதியில் மொத்தமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்கான 10 அணிகள் சார்பில் மொத்தமாக 230.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 31.35 கோடி செலவிட்டது. இதில் பல வீரர்களுக்கான ஏலத்தொகை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு ஏலத்திலும் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெறும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் ஒருவரை ஹதராபாத் அணி இரண்டு வருடதத்திற்கு முன் எடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
2024 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், குஜராத் அணி ராபின் மின்ஸ் என்ற வீரர் ஒருவரை தேர்தெடுத்தது வியப்பில் ஆழ்த்தியது. குஜராத் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸை, குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அடிப்படை ஏலத்தொகயான 20 லட்ச ரூபாய் பிரிவில் இருந்த அவரை கைப்பற்ற பல முன்னணி அணிகளும் தீவிரம் காட்டின. சென்னை அணி கூட இந்த போட்டியில் மும்முரம் காட்ட கடைசியில் குஜராத் அணி வெற்றி வாகை சூடியது. ஒரு சமூகத்திற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து வந்த கிரிக்கெட் போட்டியில் தற்போது அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடமாநிலத்தில் இருக்க கூடிய நபர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக அன்னமயில் பல செய்திகள் வந்தன. இப்போது பழங்குடியின வாலிபருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது ஒட்டுமொத்தமாக நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், 8 வயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவர் அவரது குடும்பம் உறுதுணையாக இருக்க இப்போது சாதனை படைத்துள்ளார். அண்மயில் ஒடிஷாவில் நடைபெற்ற உள்ளூர் டி-20 போட்டியில், 35 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மானாக அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் எந்த அணியாலும் வாங்கபடவில்லை மற்றும் இந்த ஆண்டு 20 லட்சத்தில் ஆரம்பித்த அவரது தொகை பல அணிகள் வாங்குவதற்கு கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.