
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. இந்த போரை இரு நாடும் இடைக்காலமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவித்தனர். தற்போது இந்த போருக்கு அமெரிக்க அதிபர் அறிவுரை கூறியுள்ளார். இதன் மூலம் போர் முடிவுக்கு வருகிறாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேல் அருகில் உள்ள பலஸ்தீனதின் ஒரு பகுதியாக காஸா உள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் ஒரு மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதல் போக்கு கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போராக மாறியது. இந்த மோதலில் இரு நாட்டில் இருந்தும் உயிரிழப்புகள் 10 ஆயிரத்தையம் கடந்தது.
இந்த போரின் ஆரம்பத்தில் இரு நாடிகளும் அங்குள்ள மக்களை சிறை பிடித்து பிணை கைதிகளாக அடைத்து வைத்தனர். இந்நிலையில், இஸ்ரேல் அரசுக்கு எதிர்கா இஸ்ரேல் மக்கள் போர் கொடி தூக்கினர் காசாவிடமிருந்து மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் இஸ்ரேல் பிரதமர் போரை தற்காலிகமாக நிறுத்த 4 நாட்களுக்கு இடைக்கால நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அப்போது மற்ற நாடுகள் இந்த இடைக்கால தடையை முழுவதுமாக கடுபடுத்துவோம் என்று தெரிவித்தனர். இரண்டு நாடுகளும் தங்களிடமுள்ள பிணை கைதிகளை விடுவித்தது. இருப்பினும் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கத் போவதாக இதனால் போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க, இருதரப்பினருக்கும் சரிசமமான சுதந்திரம், மாண்பை உறுதி செய்ய வேண்டும். அதுவே தீர்வாகும். இந்த இலக்கை எட்டும்வரை நாங்கள் (அமெரிக்கா) ஓயமாட்டோம்" என்று கூறியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபருடன் பேசியபோது, "ஹமாஸ் விடுவிக்கும் 10 இஸ்ரேலியப் பிணைக் கைதிகளுக்கும் மாறாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதேவேளையில் பிணைக் கைதிகளை விடுவித்த பின்னர் மீண்டும் இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த இடைக்கால போர் நிறுத்தத்தில் காஸாவில் உள்ள மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கியை கடத்தி வருவதாக வீடியோ ஆதாரம் மூலம் வெளியிட்டது. இதனால் போர் முடிவுக்கு வராது என்பது உறுதிபட கூறப்படுகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 14,800 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. பினை கைதிகளை விடுவித்தவுடன் போரானது தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.