24 special

பிறந்தநாள் என்று கூட பார்க்கவில்லை.. உதயநிதியை வச்சு செய்யும் இனையவாசிகள்....

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

திமுக தலைவரின் மகனும், அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி அரசியல் வருகை மற்றும் அரசியலில் தற்போதைய நிலை பற்றி தான் எதிர்க்கட்சிகள் பலவாறு விமர்சனம் செய்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்த பொழுது உதயநிதி சென்னையில் பிசினஸ் செய்து வந்தார், அப்பொழுது அவர் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. ஆனால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை துவங்கி விஜயை வைத்து குருவி என்கின்ற படத்தை முதலில் எடுத்தார். அதுதான் உதயநிதி முதலில் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தது, அப்பொழுதுதான் திமுகவின் தலைவர் கருணாநிதிக்கு இப்படி ஒரு பேரன் இருக்கிறான் என பலருக்கு தெரிய வந்தது. 


அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்ததற்கு பிறகு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கை சுத்தமாக குறைந்து போனது, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் உதயநிதி பெரிய அளவில் அரசியலில் ஈடுபடவில்லை. குறிப்பாக கூற வேண்டுமென்றால் 2016 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா மறையும் வரை உதயநிதியின் அரசியல் பிரவேசம் பெரிய அளவில் இல்லை அதன் பிறகு ஜெயலலிதா மறைந்தார் அதனை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும்  மறைந்தார்.அதன் பிறகு தான் உதயநிதி அரசியல் பிரவேசம் ஆரம்பமானது குறிப்பாக கூற வேண்டும் என்றால் 2019 ஆம் ஆண்டு உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

அப்பொழுது ஸ்டாலின் உடல்நலையை கருத்தில் கொண்டு உதயநிதி 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார், அப்பொழுது தமிழகத்தில் இருந்த மோடி எதிர்ப்பு அலை மேலும் சில காரணங்களுக்காக திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் உதயநிதியின் பிரச்சாரம் தான் என திமுகவில் இருக்கக்கூடிய உதயநிதி ஆதரவாளர்கள் பலரும் ஜம்பமாக கூறி வந்தனர். அதனை தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணி உதயநிதி வசம் வந்தது, இளைஞரணி தலைவராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உதயநிதி முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்று முதல் ஒரு ஆண்டு வரை உதயநிதி அமைச்சரவையில் இடம் பெறவில்லை அதன் பிறகு சிறப்பு அமைச்சரானார். 

திமுகவில் இருக்கக்கூடிய 10 முக்கிய அமைச்சர்களில் உதயநிதியும் ஒருவர், பல சீனியர் அமைச்சர்கள் இருந்தாலும் உதயநிதிக்கு இந்த பதவி ஏன் கொடுக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை திமுக எந்த அளவிற்கும் குறைத்துக் கொள்ளவில்லை, இந்த நிலையில் இன்று உதயநிதியின் பிறந்த நாள் திமுகவினரால் இந்த பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முதலில் இருந்தே திமுகவின் சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வண்ணம் இருக்கின்றன, விதவிதமாக போஸ்டர்கள் மற்றும் விதவிதமாக பேனர்கள் வைத்து உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஆனால் உதயநிதியின் பிறந்தநாள் என்று கூட பாராமல் எதிர்க்கட்சியினர் உதயநிதியை இணையத்தில் குறிவைத்து செய்து வருகிறார்கள்.குறிப்பாக கூறப்போனால் இன்று இந்திய அளவில் புளுகு மூட்டை உதய்  என்கின்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதனை அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சியினர் அதிக அளவில் செய்து வருகின்றனர். எதற்கு தான் இந்த ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகிறது என சில சமூக வலைதள கணக்குகளில் சென்று பார்த்தால் திமுகவில் உழைக்காமல் பதவியில் வந்தவர், இவருக்கு புளுகுமூட்டை எனக் கூறுவது தான் பொருத்தமாக இருக்கும் என பல சமூகவலைத்தள கணக்குகள் பதிவிட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவதை கண்டு அறிவாலய கும்பல் அதிர்ச்சி அடைந்துள்ளது, திமுக ஐடிவிங்கும் எப்படியாவது பிறந்தநாள் வாழ்த்து செய்திதான் தான் உதயநிதிக்கு அதிகம் செல்ல வேண்டும் என தங்கள் பங்கிற்கு தாங்களும் அதிக அளவில் பதிவுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.