24 special

மொத்தமாக ஊத்தி மூட போகும் காங்கிரஸ் காலியாக போகும் சத்தியமூர்த்தி பவன்!!

annamalai, ks alagiri
annamalai, ks alagiri

1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாஜ்பாயை தனது முதல் தேசிய தலைவராக தேர்ந்தெடுத்தது. அன்றிலிருந்து தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு மாநிலமாக தனது செல்வாக்கை உயர்த்தியதோடு மக்கள் நம்பிக்கையும் பெற்று வந்தது ஆனால் தமிழகத்தில் சமீப இரண்டு வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு உயர்ந்தும் ஓங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரைக்கும் அதிமுக திமுக என்ற இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளனர்.


ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி ஒரு பிரதான எதிர்க்கட்சியாக மூன்றாவது முன்னணி கட்சியாக வளர்ந்து உள்ளது இதற்கு மிக முக்கிய காரணமாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது தான் என்ற பேச்சு பலராலும் பேசப்படுகிறது பலராலும் பெருமிதமாக கூறப்படுகிறது. ஆனால் இது மற்ற கட்சிகளின் மாநிலத் தலைவர் பதவியில் வகிப்பவர்களுக்கு பெரும் பதற்றத்தையும் பதற்றம் நிறைந்த சூழ்நிலையில் ஏற்படுத்தியது, ஏனென்றால் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற இரண்டு வருடத்தில் அதன் கட்சியின் நிலையை தூக்கி நிறுத்தியுள்ளார்.

அதேபோன்று நமது கட்சி மாநிலத் தலைவர்கள் காலங்காலமாக மாநில தலைவர் பதவி வகித்தும் அதே நிலைமையில் இருக்கிறது என்ற வருத்தமும் ஏமாற்றமும் மற்ற கட்சிகளுக்கு இருந்தது அதிலும் குறிப்பாக காங்கிரசிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு அதிரடி செயல்களை காங்கிரஸ் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இதுவரை இருக்கும் செல்வாக்கை விட நமக்கு அதிகரிக்கும் என்ற கட்டளைகளும் திட்டங்களும் காங்கிரஸ் தேசிய தலைமையில் இருந்து தமிழக காங்கிரசுக்கு வந்ததாக கூறப்பட்டது. அதிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் காங்கிரஸின் மாநில தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரியை மாற்றிப் பார்க்கலாம் என்ன முடிவெடுத்தது தேசிய தலைமை.

எங்கே தலைவர் பதவி போய்விட்டால் கட்சியில் நாம் நிலைத்து நிற்க முடியாது என்று நினைத்த கே எஸ் அழகிரி தனது தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர்களை சந்தித்து தனது பதவியை மாற்ற வேண்டாம் நீக்க வேண்டாம் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வந்தார். அப்பொழுதும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் உறுதியாக எதையும் கூறாமல் இவரை திருப்பி அனுப்பிய தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவராக  கே.எஸ். அழகிரி நீடிக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது நேற்று முன்தினம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகளின் முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு திசையன்விளையில் நடைபெற்றது அதில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி வந்துள்ளார்.

ஆனால் இந்த மாநாட்டில் நாங்குநேரி ரூபி மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து திருநெல்வேலியில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகளிர் காங்கிரசார் கருப்பு உடையில் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்கவில்லை என்று நாங்குநேரி எம்எல்ஏ வை கட்சி தலைமை புறக்கணிக்கிறது இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நேரத்தில் இவர்களுக்குள்ளே காங்கிரசினர் அடித்துக் கொண்டு தேர்தலில் எப்படியும் போட்டியிட்டாலும் ஒருவருக்கொருவர் தோற்றுவிடவார்கள். அதனால் காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகள் மட்டுமே ஒதுக்கவேண்டும் என திமுகவில் இருக்கக்கூடிய சில மூத்த தலைவர்கள் அறிவாலயத்தில் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.