24 special

பிப்ரவரி மாதம் நடைபெற போகும் பெரிய சம்பவம்! கசிந்த உறுதியான தகவல்கள்...!

ponmudi
ponmudi

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த பொன்முடி தற்பொழுது அமைச்சர் பதவியை இழந்து மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபதாரத்தையும் பெற்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! ஏனென்றால் கடந்த 2006 முதல் பதினோராம் ஆண்டில் நடைபெற்ற திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ல் வழக்கு பதிவு செய்தது இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார், ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஆனந்த வெங்கடேஷ் இவ்வழக்கை கவனித்து அதன் விசாரணையும் முழுமையாக பார்த்ததில் பல குளறுபடிகளும்! தவறுகளும் நடந்திருப்பதாக பார்த்தவுடனே தெரிகிறது இதனால் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் மறுவிசாரணைக்கு எடுப்பதாகவும் இதுகுறித்து அமைச்சர் பொன் முடியும் அவரது மனைவியும் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். 


இதற்குப் பிறகு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளனர், இதனை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஆனந்த வெங்கடேஷ் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். ஏனென்றால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருவார் அதன்படியே அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்ட பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார், இதனால் இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்று விசாரணையில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக அமைச்சர் பொன்முடியின் வழக்கு இறுதி தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரனே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு கடந்த ஜனவரி இரண்டாம் தேதியில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளும் இனி அதிக அளவில் தீவிரமாகும் என்று கூறப்பட்டு வந்தது.

ஏனென்றால் ஏற்கனவே தமிழக அமைச்சர்களான தங்கம் தென்னரசு, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோரின் சொத்து குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தற்பொழுது பொன்முடி மட்டுமே தண்டனையை பெற்றுள்ள நிலையில் அடுத்த அமைச்சர்களின் தீர்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவதற்கான தேதியை நீதிபதி ஆனந்திடங்களில் குறித்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சர்களான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரின் வழக்குகளில் இறுதி விசாரணைகள் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியசாமியின் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி களின் நடக்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இப்படி பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 5 அமைச்சர்களின் சொத்து குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகள் இறுதி விசாரணையை எட்டி உள்ள நிலையில் இவ்வழக்குகளில் தீர்ப்பும் வெளியாகும் பட்சத்தில் இவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.