கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய அரசியல் விமர்சகர் சவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழக முதல்வருக்கு நரம்பு தளர்ச்சி வியாதி இருப்பதாகவும் அதற்காகவே பல நேரங்களில் தமிழக முதல்வர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது மகனை கலந்து கொள்ள வைக்கிறார் என்றும் கூறினார். இது மட்டுமின்றி இவரின் நரம்பு தளர்ச்சி வியாதிக்கும் எந்த ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை அதனால் தற்போது ஆராய்ச்சியில் உள்ள சில சிகிச்சை முறைகளை முதல்வர் செய்து வருகிறார் அதன் ஒரு முறையே நீச்சல் குளத்தில் நடப்பது, இதற்காகவே இவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் ஸ்விம்மிங் ஃப்யூலை கட்டி உள்ளார் என்று பகிரங்க தகவலை வெளியிட்டார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இப்படி முதல்வர் குறித்த உண்மையை பட்டென்று போட்டு உடைத்தது சமூக வலைதளம் முழுவதும் பேசுபொருளாக மாறியது அது மட்டும் இன்றி அறிவாலயத்திலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏனென்றால் திமுக தொண்டர்கள் ஏற்கனவே முதல்வர் எங்களை வந்து பார்ப்பதில்லை எங்கள் மீது அவருக்கு அக்கறையே இல்லை என்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர் இதற்கு ஏற்றார் போல் திமுகவின் மேயருக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர்களை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர அனுமதி கேட்ட செய்தி தமிழக அரசியலில் பரபரப்பானது அறிவாலயத்தின் மற்ற நிர்வாகிகளுக்கு இடையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி உட்கட்சி பூசலாலும் திமுக நாளுக்கு நாள் பெரும் சவால்களை சந்தித்து வரும் நிலையில் தமிழகத்திலும் திமுகவிற்கே எதிரான எதிர்ப்பு அலைக நிலவி வருகிறது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து திமுகவிற்கு எதிரான போராட்டங்களை சில சங்கங்கள் முன்னெடுத்து வருகிறது முதலில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர், அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களும் போராடினர் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டது என இந்த வருடத்தின் தொடக்கம் முதலே பெரும் பின்னடைவுகளை சந்தித்து வரும் திமுக கடந்த டிசம்பர் மாதத்திலும் பெரும் பின்னடைவுகளை சந்தித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் சமாளிக்கும் நிலைமையிலும் முதல்வர் இல்லை! வியாதியால் அவர் நாளுக்கு நாள் மிகவும் உடல் நல பாதிப்பை சந்தித்து வருகிறார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது. இதனால் விரைவில் துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு அளித்து அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முதலீடுகளை ஈர்க்கவும் ஜனவரி 28ஆம் தேதி முதல்வர் முக ஸ்டான்லி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் திமுக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது.
ஆனால், இந்த மாத இறுதியில் விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்டதோடு தமிழக முதல்வர் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார், அதுவும் இந்த பயணம் அரசு முறை பயணம் என்று கூறப்பட்டாலும் உடல் நல சார்ந்த சில பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டமும் இதில் அடங்கி உள்ளதாகவும் முதல்வர் உடனே அவருடைய குடும்பத்தினரும் மருத்துவர்கள் சிலரும் சொல்ல இருப்பதாகவும், முன்னதாக முதல்வர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு முடி சூட்டு விழாவும் நடைபெறும் என்றும் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது திமுகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.