24 special

பிக் பாஸ் பிரபலம் காவல்நிலையத்தில் ஆஜர்...! முகத்தை மூடிக்கொண்டு ஓடிய அவலம்!

Vikram
Vikram

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் விக்ரமன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் முன்னிலையில் விசிகவில் இணைந்தார். இவர் மீது பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது காவல்துறை ஒன்றல்ல ரெண்டல்ல மொத்தம் 13 வழக்குகளின் கீழ் புகார் பதிவு செய்துள்ளனர். இதனை விசாரணைக்காக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான விக்ரம் முகத்தை மூடி கொண்டு ஓடிய வீடியோ இணையத்தில் உலா வருகிறது.


ஊடக விவாத நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து பிரபலமான விக்ரமன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை செய்தித் தொடர்பாளராகவும் பதவியும் வகித்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சர்ச்சையில் சிக்கினார். அதாவது, கடந்த சில மாதங்களாகவே, விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். 

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி இவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் லண்டனில் ஆய்வுபட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார். சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின் அந்த பெண் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் புகார் அளித்தார். அதில், என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் 13.7 லட்சம் வரை பணம் பெற்றார் என கூறி 12 லட்சம் வரை திருப்பி கொடுத்தார். இதுவரை 1.7 லட்சம் கொடுக்கவில்லை எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என புகார் தெரிவித்தார். விக்ரமன் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவர் மீது பதிவு செய்யப்பட்ட அணைத்து வழக்குகளும் சாதாரண வழக்குகள் கிடையாது. இந்த வழக்கினை கொண்டு கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது.

இவரை கடந்த ஜூலை மாதம் முதல் விசாரிக்க கட்சியினர் பாதுகாத்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அப்போது 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், என் மீது வேண்டுமென்று அவதூறு பரப்பியதாகவும், என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் ஆஜராக தயார் என கூறியதாக கூறப்படுகிறது. விசாரணை முடித்து வெளியில் வந்த விக்ரமன் செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பவும், படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர். அப்போது கேமராவை கண்டதும் காரில் ஓடி ஏறி கொண்டு முகத்தை கையால் வைத்து மூடிக்கொண்டு காரை எடுக்க சொல்லியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.