24 special

ஹோம் லோன் எடுத்திருக்கீங்களா அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

home loan
home loan

 அனைத்து தரப்பினருக்கும் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது மாபெரும் ஆசையாகவும் வாழ்க்கையின் லட்சியமாக கூட இருக்கும். ஏனென்றால் வாடகையில் குடியிருக்கும் பொழுது மாதாமாதம் வாடகை என்பது கண்டிப்பாக கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் அந்த வாடகைக்கு செலுத்திய பணத்தை நாம் சேர்த்து வைத்திருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட அளவு தொகை நம் கையில் இருந்திருக்கும் என்ற ஒரு மனநிலையும் ஏற்படும் இதற்காகவே விரைந்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசையில் தற்பொழுது அதிக அளவில் ஹோம் லோனை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டு வருகின்றனர். அதுவும் முன்பெல்லாம் வீடு கடன் வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வங்கியை நோக்கி நாம் அலையும் நிலை ஏற்படும் ஆனால் இன்று வங்கிகளாகவே தொலைபேசி மூலமாக அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பல ஆஃபர்களை நமக்கு அளித்து வருகின்றனர். 


அதுவும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு இ எம் ஐ வீட்டுக் கடன் என்பது முதலில் மிகவும் எளிமையானதாக காணப்படும் ஏனென்றால் வங்கிகளில் இந்த வீட்டு கடனை திருப்பி அடைப்பதற்கு கிட்டத்தட்ட 25 முதல் 30 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கின்றனர் காலம் இருக்கிறதே அதனால் வீட்டை இப்பொழுது வாங்கிவிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அடித்து விடலாம் என்று ஒரு மனப்பான்மையிலும் தைரியத்திலும் ஹோம் லோனை வாங்கி விடுவார்கள் ஆனால் அதற்குப் பிறகு 25 வயதில் ஒருவர் இந்த வீட்டு லோணை எடுக்கிறார் என்றால் கிட்டத்தட்ட 60 வயது வரை இந்த ஹோம் லோன் நீடித்துக் கொண்டிருக்கிறது,  ஏறத்தாழ தனது முழு வாழ்நாளில் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஹோம் லோனிற்கே கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வீட்டுக் கடனின் வட்டி சதவிகிதம் அதிகரிக்கிறது! ஒரு மாதம் கட்டாமல் அடுத்த மாதம் சேர்த்து கட்டினால் அதற்கான வட்டியும் அதிகமாக்கி விடுகிறது. 

இதனால் ஒவ்வொரு மாதமும் சரியாக கட்டிட வேண்டும் என்ற ஒரு நோக்கில் மக்கள் தங்கள் உடலையும் மனநிலையையும் சற்றும் கவனிக்காமல் வேலை வேலை வேலை... என்று ஓடி தன் குடும்பத்தினருடனும் நிம்மதியாக பேச முடியாமல் வீட்டுக் கடனை அடைப்பதையே தனது முக்கிய நோக்கமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மேலும் நாம் மாத மாதம் வீட்டுக் கடனை திருப்பி செலுத்தும் போது பெறப்பட்ட தொகை விட அதிக அளவிலான தொகையவே நாம் செலுத்துகிறோம் என்பதும் இன்னும் சில மக்களுக்கு தெரியாமல் உள்ளது. உதாரணமாக ஒரு வீடு வாங்குவதற்கு 35 லட்சம் ரூபாயை வங்கிடம் கடனாக நாம் பெறுகிறோம் என்றால் அதன் வட்டியானது 25 ஆண்டுகளுக்கு 8.50 சதவீதம் என்று வைத்துக் கொள்ளலாம்!

இதன்படி மாதம்தோறும் நம் கட்ட வேண்டிய இ எம் ஐ தொகை என்பது 24,157 ரூபாய் இதனை நாம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு செலுத்தி வருகிறோம் என்றால் கிட்டத்தட்ட 72 லட்சத்து 47 ஆயிரத்து 100 ரூபாயை வங்கிக்கு 25வது ஆண்டு முடிவில் நாம் செலுத்தி இருப்போம்! நான் பெறப்பட்ட தொகை 30 லட்சம் ஆனால் திருப்பி செலுத்தும் தொகையோ 72 லட்சத்து ஐம்பதாயிரம்! நாம் பெற்ற கடனை விட ஒன்றை மடங்கு அதிகளவிலான வட்டியை நாம் செலுத்தும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் இதனால் ஒவ்வொருவரும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு சிந்தித்து வாங்க வேண்டும். வீடு வாங்குவது நமது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும் அதனை மற்ற வழிகளில் வாங்கிக் கொள்ளலாம் அதாவது இஎம்ஐ செலுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்து அதனை வேறு ஒரு நல்ல இன்வெஸ்ட்மெண்டில் போட்டால் கூட நமது சேமிப்பு பெருகி அதன் மூலம் வீடு வாங்கும் கனவையும் நாம் நிறைவேற்றிக் கொள்ளலாம்!