
பிரபல யூடியூப்ராகவும் பைக் ரேஸ்ராகவும் அறியப்படும் டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சில விபகாரங்களில் சிக்கிக் கொள்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாராலும் அறியப்படாதவராக இருந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற அவரது பிறந்த நாளன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ஒரு பிரபல நடிகர் ஒரு பகுதிக்கு வந்திருந்தால் எவ்வளவு கூட்டம் சேருமோ அவ்வளவு திரளான கூட்டம் இவரது பிறந்தநாள் அன்று கூடியிருந்தது அதற்குப் பிறகு தமிழக பத்திரிக்கை நிறுவனத்தால் கவனம் பெற்றார். யார் இந்த TTF வாசன் என்று இவரை குறித்த தேடல்கள் அந்த சமயத்தில் மேலோங்கி இருந்தது அப்பொழுது தான் தெரியும் என்பது இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை வைத்துக்கொண்டு விதிகளை மீறி ரேசில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இதனால் பலமுறை காவல்துறையால் கண்டிப்புகளையும், அபராதங்களையும் பெற்றவர் என்றும் தெரியவந்தது மேலும் இவரது பிறந்தநாளன்று ஏற்பாடு செய்யப்பட்ட ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் சமூக வலைதளங்களில் விவாதங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாகசம் செய்ய முற்பட்ட சமயம் அப்பொழுது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்கு உள்ளானார். இதனால் அவரது கை எலும்பு முறிந்தது மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பானது இதனால் இவரை காண்பதற்கு மருத்துவமனையில் குவிந்தவர்கள் ஏராளம்! அதற்குப் பிறகு விபத்து ஏற்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது மனித உயிருக்கான ஆபத்தை உண்டாக்குவது பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என்று இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து டிடிஎஃப் வாசனை கைது செய்தனர். இருப்பினும் இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று காலத்திலேயே தனக்கான ஜாமின் கோரி மூன்று முறை நீதிமன்றத்தை அணுகினார் இருப்பினும் அவரது ஜாமீன் மனுக்கள் மூன்று முறையில் நிராகரிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் முன்னிலையில் இவரது ஜாமீன் குறித்த மனு விசாரணைக்கு வந்த பொழுது தவறான வழிகளில் இளைஞர்களை நடத்திச் செல்லும் செயலில் ஈடுபட்டு வரும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடிவிடலாம் மேலும் அவரது பைக்கையும் எடுத்துவிடலாம் என்று உத்தரவிட்டு டி டி எஃப் வாசனை ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தார். அதற்குப் பிறகு இவரது ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது இருப்பினும் இவரது லைசென்ஸ் பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜாமினில் கையெழுத்திட்டு வரும் வாசன் பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில், அவர் கூறிய விஷயங்கள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அவர் கூறும்போது ‘ரொம்ப அலைச்சலாக உள்ளது அது ஒன்றுதான் பிரச்சனையாக உள்ளது! ஒரு நாள் முழுவதும் இப்படியே வீணாக போகிறது! என்று தெரிவித்தார் இதற்குப் பிறகு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் தரப்பில் கேட்ட பொழுது ஒரு பிசினஸ் ஒன்னு ஸ்டார்ட் செய்யலாம் என்று நினைக்கிறேன்! டி டி எஃப் ஆட்டோமொபைல்ஸ் அண்ட் பிரைவேட் லிமிடெட் என்கின்ற கம்பெனியை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பாகவே இது குறித்த திட்டம் இருந்தது நல்ல தரமான ஜிபிஎஸ்சை மையப்படுத்தி ஆரம்பிக்க உள்ளோம் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் இந்த ஜிபிஎஸ்ஐ லாஞ்ச் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார், அதோடு சிறையில் இருந்த பொழுது பைக்கை திருடியவர்களுடன் பேசினேன் அவர்கள் பைக்கை திருடிக் கொண்டு சென்று 2000, 3000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, பைக்கில் திருடுவதற்கும் ஏகப்பட்ட டெக்னிக்களை அவர்கள் வைத்துள்ளார்கள் என்று சிறையில் திருடர்களுடன் கொண்ட சகவாசத்தை குறித்தும் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடர்களுடன் TTF வாசனா எனவும் வேறு விவாதங்கள் எழுந்துள்ளது..