24 special

ரீல்ஸ் போட்டதால் வந்த விபரீதம் ...!

police, tiruchi issue
police, tiruchi issue

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ்  என்கிற 24 வயது இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை பதிவிட்டு வந்தார் -  மேலும் வெள்ளிக்கிழமை காலை எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகேஷ் அரிவாளுடன் சுற்றி திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார் -  இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பார்த்த போது முகேஷ் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது -  இதனை அடுத்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோ வீடியோவை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறையின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு குழு எப்போதும் இதனை கண்காணிப்பார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.ரீல்ஸ் மோகத்தில் பல இளைஞர்களும் பெண்களும் சட்டத்தை மீறி வீடியோக்களை வெளியிட்ட உடன் காவல்துறை நடவடிக்கை எடுப்பது போல அவர்களை அது போன்று தூண்டும் வகையில் காட்சிகளை அமைக்கும் சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் மீது எப்போது சட்டம் பாயும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.விஜய் சேதுபதி அவரது பிறந்தநாளின் போது பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் அவரை வெறும் எச்சரிக்கையுடன் விட்ட காவல்துறை விஜய் சேதுபதியை அன்றே கைது செய்து இருந்தால் இன்று இது போன்ற அசம்பாவிதம் இளைஞர்கள் மத்தியில் அரங்கேறி இருக்குமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.மொத்தத்தில் இளைஞர் மீது காவல்துறை எடுத்தது 100% சரி என்றும் இதே போல் செயல்களில் ஈடுபடும் VIP நபர்களையும் இதே பாணியில் கைது செய்தால் தமிழக காவல்துறை மீது மதிப்பு கூடும் என்றே எதிர்பார்க்க படுகிறது.