
தினந்தோறும் மாற்றங்களை கண்டு வருகின்ற இந்த உலகத்தில் அனைத்து துறைகள் மற்றும் தரப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது அந்த வகையில் நமது பழக்கவழக்கம் உடை உணவு முறைகள் லைப் ஸ்டைல் என அனைத்துமே மாற்றத்தை கண்டு வருகிறது அந்த வரிசையில் ஒருவர் தன் அன்பை மற்றொருவருக்கு வெளிகாட்டுவதற்கு கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முன்பெல்லாம் தனது நண்பரின் பிறந்தநாள் என்று வந்து விட்டால் அவருக்கு என்ன தேவை இருக்கிறதோ அதை பார்த்து வாங்கி கொடுப்பார்கள் பள்ளி பருவம் என்றால் பென், பென்சில, பென்சில் பாக்ஸ் அல்லது அவருக்கு பிடித்தமான பொருளையும் வாங்கி கொடுப்பார்கள் திருமண நாள் அல்லது ஏதேனும் விசேஷங்கள் இருந்தால் அதற்காக பிரத்தியேகமாக உள்ள சில விசேஷ பொருள்களை வாங்கி கொடுப்பார்கள்.
ஆனால் தற்பொழுது பரிசுகள் கொடுப்பதிலும் பெறுவதிலும் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நாம் கொடுக்கும் பரிசு மூலம் நம் நண்பர் நம்மை காலாகாலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு ஒரு பரிசை உருவாக்குகிறார்கள், விலையை கூட சற்றும் யோசிப்பதில்லை, அந்த வகையில் தற்போது அதிகமாக பரிசுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு பொருள்தான் ஓவியங்கள் பென்சில் மற்றும் கலர் பெயிண்டிங் ஆல் வரையப்படும் ஓவியங்கள் அதிக அளவில் பரிசாக கொடுக்கப்படுகிறது அந்த ஓவியங்களுமே தனித்தனியாக இருக்கும் இரு வேறு புகைப்படங்களை ஒன்றிணைத்து வரையும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வரைந்து அதனை பரிசாக கொடுக்கிறார்கள் இதனையே ஒரு சைடு பிசினஸ் ஆகவும் முக்கிய தொழிலாகவும் வைத்து பலர் இன்ஸ்ட்டாவில் இறங்கி குறிப்பிடத்தக்க அளவில் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்.
இந்த ஓவியங்களிலேயே ஒரு படி முன்னே சென்று பலவிதமான பொருட்களை வைத்து ஓவியம் வரைவதையும் முயற்சித்துள்ளார்கள் சில ஓவியர்கள் அந்த வரிசையில் ஒரு ஓவியர் ரத்தத்தின் மூலம் படத்தை வரைந்து கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். அதாவது முன்பெல்லாம் காதலர்கள் தன் காதலிக்கு கடிதம் எழுதும் போது ரத்தத்தில் கடிதம் எழுதி இருப்பார்களே அதேபோன்றுதான் இது! ஆனால் கடிதத்திற்கு பதில் ஓவியம் வரையப்பட்டுள்ளது! கடந்த 2022 க்கு முன்புதான் இந்த பிளட் ஆர்ட் எனப்படுகின்ற ரத்தத்தில் வரையப்படும் ஓவியங்கள் பிரபலமானது பிரபலமான உடனே பலர் அந்த வரைபடத்தையும் தேடி பல ஓவியர்களை இன்ஸ்டாகிராமல் தேடி உள்ளனர். ஆனால் இந்த முறையில் ரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது உடலின் மிக முக்கியமானது ரத்தம்! அவற்றை தவறுதலாக கையாண்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதற்காக கடந்த 2022லே இந்த ஓவியத்தை அரசு தடை விதித்தது.
இருப்பினும் அந்த தடையை மீறி திருச்சியில் ஒரு பெட் ஷாப்பை வைத்து நடத்தி வருகின்ற முகிலன் ஓவியராகவும் இருந்துள்ளார் அதனால் தனது ஓவியத்தில் இந்த பிளட் ஆட்டையும் செய்ய முயற்சித்து பலரிடம் இதற்கான ஆர்டரையும் பெற்று ரத்தத்தில் அவர்கள் விரும்புவர்களின் உருவத்தை வரைந்து ரூபாய் 4500 க்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இதற்காக யாரும் அவரை நேரில் நாட தேவையில்லை இரண்டு ml ரத்தத்தை எடுத்து கொரியர் செய்தாலே போதும் அவர்கள் விரும்புவர்களின் உருவத்தை முகிலன் வரைந்து கொடுத்து வந்துள்ளார்.ஆனால் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் போதிய அளவில் ரத்தம் இல்லாமல் இறந்து போகின்ற செய்திகள் பல வெளியாகிக் கொண்டிருக்கிறது அதோடு உயிருக்கும் உடலுக்கும் மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது ரத்தம் அதன் காரணமாகவே இரத்தத்தை யாரும் விலை கொடுத்து வாங்க கூடாது என கொடையாக பெற வேண்டுமென்ற ஒரு அடிப்படையில் ரத்தம் தானமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரத்தம் எடுக்கும் பொழுது சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் சரியான முறையை கையாளவில்லை என்றால் ஒருவரது உயிருக்கே மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் இது ஆபத்து எனவும் கூறுகின்றனர்.