Cinema

பரிதாபங்களுக்கே பரிதாபமா...! தாங்கள் ஏமாற்றப்பட்டதை கூறிய கோபி சுதாகர்...

GOPI SUDHAKAR
GOPI SUDHAKAR

சினிமாவில் அடி எடுத்து வைக்க வேண்டும் சினிமா தான் எனது கனவு என்று சென்னையை நோக்கி வரும் பலருக்கு youtube சேனல்கள் மிகவும் பயனுள்ள செயலியாக உள்ளது இந்த செயலி மூலமே தன்னிடம் இருக்கும் திறமையும் ஆற்றலையும் வெளிக்காட்டி அதிக சப்ஸ்க்ரைபர்கள் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகிறார்கள் அப்படி தற்போது youtube ஸ்டார்கள் மற்றும் பிரபலங்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த வகையில் சினிமாவில் எப்படி கவுண்டமணி செந்தில் காம்போ ஒரு ஹிட்ட அடித்ததோ அதேபோன்று யூட்யூபில் பரிதாபங்கள் என்ற youtube சேனல் மூலம் கோபி மற்றும் சுதாகரின் காம்போ கிட் அடித்தது. பரிதாபங்கள் என்ற ஒரு youtube சேனலை தொடங்கி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்தும் அதற்கு சில ரியாக்ஷன் களை கொடுத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர்.  இருவரும் இன்றுவரை பல பரிதாபங்களை பதிவிட்டு அசைக்க முடியாத என்டர்டைன்மெண்டை கொடுத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட இவர்களது யூடியூப் சேனலை 4 மில்லியனிற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர்.


எப்படி சினிமாவில் நுழைவதற்கு youtube ஒரு முக்கிய தளமாக உள்ளதோ அதேபோன்றுதான் கோபி மற்றும் சுதாகர் இருவருக்குமே தனது கனவை அடைவதற்கு youtube ஒரு வழியாக இருந்துள்ளது. அதனால் தனது வழியில் சரியாக சென்று கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த கோபி சுதாகர் சினிமாவில் இருவரும் இணைந்து படம் நடிக்க திட்டமிட்டனர் அதற்காக மக்களிடம் இருந்து சுமார் ஆறு கோடி வரை நிதி திரட்டினார்கள். நிதி திரட்டிய சில நாட்களிலே ஹே மணி கம் டுடே கோ டுமாரோ என்ற ஒரு தலைப்பில் உருவாக்க போகும் படத்தின் டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்கள் இருப்பினும் அவர்கள் அந்த டைட்டிலை வெளியிட்ட பிறகு கொரோனாவின் பெருந்துயர் காலம் வந்ததால் அவர்களின் படப்பிடிப்பு தடைபட்டு போனது. சரி கொரோனாவிற்கு பிறகு இந்த படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்த பொழுது அந்த படத்தை கைவிட்டு விட்டு புதிய வெப் சீரிஸ் ஒன்றை எடுக்க ஆரம்பித்தனர் இந்த சீரிஸில் முதல் பாடல் கூட சமீபத்தில் வெளியானது. 

சரி இந்த வெப் சீரிஸை முடித்துவிட்டு தனது முதல் படத்தை இவர்கள் தொடங்குவார்கள் என்று கூறப்பட்டு வருகிற நிலையில் அந்த முதல் படத்தில் பணம் தருவதாக ஒருவர் கூறி பிறகு ஏமாற்றியதை ஒரு youtube சேனல் பேட்டி ஒன்று கோபியும் சுதாகரும் தெரிவித்துள்ளனர். அதாவது முதல் படம் ஆரம்பிக்கும் பொழுது ஒருவரிடம் இருந்து பணம் பெற்று பணம் முடிந்த பிறகு திருப்பி கொடுத்து விடலாம் என நாங்கள் படபிடிப்பை தொடங்கினோம் அதற்குப் பிறகு கொரோனா காலம் வந்தது ஆனால் பணம் தருவதாக கூறிய நபர் எங்களை ஏமாற்ற ஆரம்பித்தார், ஆனால் எங்களால் அதை ஏற்க முடியவில்லை அவர் கொடுப்பார் என்று நாங்கள் நம்பி இருந்தோம் ஏனென்றால் ஊரில் இருந்து வந்து வேலை பார்த்தோம் வேலை கிடைத்தது ஊருக்கு போக வேண்டாம் என்று முடிவு எடுத்தோம் அதுவும் சரியாக இருந்தது அதே மாதிரி அவரும் தருவார் என்று நாங்கள் நம்பியது படியே நடக்கும் என்று பொய்யாக நம்பிக்கையை சுமந்து கொண்டு நான் முழுவதுமாக இறங்கி விட்டேன் என்று கோபி கூறினார். 

இப்படியே கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போனது! எங்களிடமிருந்த பணத்தை முழுவதுமாக செலவழித்து விட்டு படத்தையும் முடிக்க முடியாமல் மிகவும் துயரப்பட்டோம் அதனால் சேனலை விட்டுவிட்டு திரும்பியும் ஊருக்கே சென்றுவிடலாம் என்று ஒரு நிலைமைக்கும் தள்ளப்பட்டு விட்டோம் அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டோம்! அதற்குப் பிறகு தெரிந்த நண்பர் ஒருவர் கொடுத்த நம்பிக்கையால் இண்டிகிரேஷன் எல்லாம் செய்து மீண்டும் வீடியோக்களை சேனலில் போஸ்ட் பண்ணி வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளையும் எடுத்து அதை காமெடியாக மக்களுக்கு உணர்த்தி வந்த இவர்களுக்கே இப்படி ஒரு நிலைமையா என்ற வகையில் கோபி மற்றும் சுதாகர் ஏமாற்றப்பட்டுள்ளது தற்போது சமூக வலைதளம் முழுவதும் இவர்களது விஷயம் கவனம் பெற்று வருகிறது.