24 special

16 அடி ஆழத்தில் போகர் செய்த அதிசயம்... சிலிர்க்கவைக்கும் சேயோன் மர்மம்.....

murugan temple
murugan temple

பல முன்னணி நடிகர் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் ரகசியமாக தேடிச் செல்கின்ற ஒரு கோவில் என்றால் அது ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில். அதாவது தமிழகத்தில் தற்போது உள்ள மிகவும் பிரசித்து பெற்ற கோவில்களில் ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவிலும் ஒன்று, இங்கு ராதாரவி, தேவா, மீனா போன்ற முன்னணி தமிழ் திரையுலக நடிகர்களும் மூத்த அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இங்கு வந்து ஸ்ரீ பாதாள செம்பு முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர். அப்படி என்ன சிறப்புகளை இந்த கோவில் கொண்டுள்ளது என்றால் உலகிலேயே முதல் முதலாக கருங்காலி அறிமுகம் செய்த கோவிலும் கருங்காலி மாலையை முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்குகிற கோவிலும் இதுவே! அதோடு 650 வருடங்களுக்கு முன்பு போகரால் செய்யப்பட்ட செம்பு முருகன் சிலை 16 அடி ஆழத்தில் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலை இரண்டாவது திருச்செந்தூர் என்றும் சிலர் அழைக்கிறார்கள். 


மேலும் இந்த கோவிலுக்கு பின்னால் ஒரு புராண கதையும் கூறப்படுகிறது அதாவது நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் என்ற தமிழ் சித்தரின் அடுத்த பிறவியாக சொல்லப்படுகின்ற திருக்கடையூர் சித்தர் தான் பஞ்சலோகங்களை வைத்து முருகன் சிலையை செய்து பாதாளத்தில் வைத்து வழிபட்டு வந்ததாகவும் அவரின் வம்சாவளியான சித்தர்களின் வாரிசுகளை தற்போது வரை இந்த கோவிலை மேம்படுத்தி இன்று பாதாள செம்பு முருகன் கோவில் என்ற அளவிற்கு வளர்ச்சி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் நுழையும் பொழுதே 12 அடி உயரத்தில் சங்கிலி கருப்பன் சுவாமி சிலையும் உள்ளது உலகத்திலேயே முருகன் கோவிலில் சங்கிலி கருப்பன் சிலை அமைந்திருப்பது ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவிலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும்.

அதுமட்டுமின்றி மற்ற கோவில்களில் தருவது போன்ற திருநீரு பிரசாதமாக வழங்கப்படுவதில்லை மாறாக 18 வகையான மூலிகைகளைக் கொண்டு ஆதினத்தால் தயாரிக்கப்படுகிறது இந்த கோவிலின் திருநீர்! மேலும் அமாவாசை, பௌர்ணமி, கிரித்திகை, சஷ்டி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே ஸ்ரீ பாதாள சிம்பு முருகன் கோவிலில் திருநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த திருநீரை தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் வரை ஆகும் என்றும் கோவிலில் நேரடியாக வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருநீர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக முருகன் கோவில் எல்லாமே குன்றின் மீது தான் அமர்ந்திருக்கும் அப்படி குன்றின் மீது ஏறி முருகனை தரிசித்து விட்டு இறங்கும் பொழுது இறக்கமான பாதையாக இருக்கும்.

அப்படி இறக்கமான பாதையாக இல்லாமல் ஏறு பாதியாக இருந்தால் இங்கு வரும் பக்தர்களின் வாழ்க்கையும் ஏற்றமாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பாதாள செம்பு முருகன் கோவிலில் முருகனை இறங்கிச் சென்று தரிசித்து விட்டு ஒரு ஏற்றமான பாதிக்கு வருவது போன்ற சிறப்பான அமைப்பில் இங்கு கட்டப்பட்டுள்ளது. அதோடு இந்த கோவிலுக்கு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வந்து சென்றால் நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் விரைவில் நம் கை கூடி வரும் என்பது இங்கு வந்து பலனைந்த பக்தர்களின் கூற்றாக உள்ளது. இன்றளவும் இந்த கோவில் குறித்த செய்திகள் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போது இந்த கோவில் குறித்த மற்றுமொரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் மற்ற இந்து கோவில்களில் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கூட வாகன நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் இந்த கோவிலில் வாகனங்கள் நிறுத்துவதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை, மேலும் மற்ற கோவில்களில் இருப்பது போன்ற ஸ்பெஷல் தரிசனம் என கட்டண தரிசனம் கிடையவே கிடையாது எவ்வளவு பெரிய அதிகாரியாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே பாதை தான் இந்த கோவிலில்! மற்றும் ஊனமுற்றவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் இங்கு இலவசமாக சிறப்பு பூஜைகளை செய்து கொடுக்கிறார்கள் அதோடு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தற்பொழுது ராணுவத்தில் இருப்பவர்களுக்கும் இங்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கோவிலில் எந்த ஒரு அர்ச்சகருக்கும் தட்டில் பணம் வைக்க கூடாதாம் பணம் வைத்தால் அவர்களை அதனை திருப்பி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவார்களாம் இப்படி தட்டில் பணம் போடக்கூடாது என்பதற்கான போஸ்டர்களையும் பதாகைகளையும் அந்த கோவிலில் வைத்துள்ளார்கள். என்னப்பா எந்த ஒரு இந்து கோவிலிலும் இல்லாத பல சிறப்புகள் இந்த கோவில்ல இருக்கு என்று உங்களுக்கே தோன்றும் இதை நீங்களும் நேரில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும் என்றால் உடனடியாக செல்லுங்கள் ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவிலிற்கு!