டெல்லியில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் 1,700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியதை அடுத்து அந்த பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கும் தமிழ் திரை உலகின் தயாரிப்பாளராகவும் திமுகவும் நிர்வாகியாகவும் உள்ள ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கு கைது செய்து விசாரணை மேற்கொள்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்ற பொழுது அவர் தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இந்த செய்தி சமூக வலைதளம் முழுவதும் தீயாகப் பரவ திமுக இவரை கட்சியிலிருந்து முழுமையாக நீக்கியது அதோடு அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நேரில் ஆஜராகும் படி சம்மனை ஒட்டியது! மேலும் மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து விட்டு சென்றனர். இதனை அடுத்து இயக்குனர் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் கட்டத்தில் அமலாக்க துறையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் முன்வந்துள்ள நிலையில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் இயக்குனர் அமீர் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து தயாரிப்பாளர் ஜாபர் குறித்த செய்திகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளியானதால் இயக்குனர் அமீர் ஜாபர் சாதிக் குறித்த தகவல்கள் தனக்குத் தெரியவில்லை என்றும் இது போன்று சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவரிடம் இனி பணியாற்ற போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். இருப்பினும் ஜாபர் சாதிக் மற்றும் அமீர் இருவருக்கும் அதிக நெருக்கம் உள்ளதாகவும் அதனால் ஜாபர் சாதி தற்போது தலைமறைவாக உள்ள தகவல் அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் எங்கு இருக்கிறார் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும் போதை பொருள் கடத்தல் குறித்த விவகாரத்தில் அமீருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற வகையில் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனால் இயக்குனர் அமீர், என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய கருத்தை நான் தெளிவாக கூறிய பிறகும் தொடர்ந்து சிலர் சமூக வலைதள பக்கங்களில் என் மீது குற்றம் சாடி வருவதோடு குற்ற செயல்களோடு என்னை தொடர்பு படுத்தி வீடியோக்களை வெளியிடுவதை பார்க்க முடிகிறது அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று கூறிக் கொள்கிறேன் இப்படி என் மீது குற்றம் கூறி தொடர்பு படுத்த முயற்சிப்பது எனது பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துமே தவிர எனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது! குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு காவல்துறை இருக்கிறார்கள் அவர்கள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் என்பதை பேசி அதனை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் கூறுவது உண்மைதானா என்ற வகையிலான பேச்சுக்கள் சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் உலா வந்தது. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இயக்குனர் அமீர் குறித்து திடிக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது 2015 முதல் இயக்குனர் அமீர், ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்துள்ளனர்.
2017 அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு அமீருக்கு 70 லட்சம் கொடுத்து இருக்கான் ஜாபர்! மேலும் அமீரின் T நகர் அலுவலக வாடகை, செலவுகளை முழுக்க செய்வது ஜாபர், அதோடு அமீருக்கு மாசம் 5 லட்சம் செலவுக்கு காசு கொடுத்து வந்தது ஜாபர்! இப்படி இருக்கும் நிலையில் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் மட்டுமே எங்களுக்கு தொடர்பு இருக்கிறது அதற்கு முன்பெல்லாம் அவரை எனக்கு முழுமையாக தெரியாது என்ற வகையில் கூறியுள்ளார்! ஆனால் இருவரும் சேர்ந்து எப்படி மூன்று கஃபேவையும் கம்பெனியையும் தொடங்குகிறார்கள்! இவை அனைத்திற்கும் பணம் எங்கிருந்து வந்தது இதை அமீர் ஜாஃபரிடம் கேட்காமலா இத்தனையும் செய்திருப்பார் எனவே ஜாபர் செய்யும் தொழில் குறித்தும் எங்கிருந்து அவர் பணம் பெறுகிறார் என்பது குறித்தும் அமீருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் அந்த போதை கும்பல் ஜெகபர் சாதிக் தற்போது தீவு ஒன்றில் மறைத்துள்ளார் என்றும் கூறிய விவகாரம் வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.