24 special

சிவன் குடும்பத்தில் இருந்தே சகிப்புத்தன்மையை எடுத்துக்காட்டி வைரலாகும் வீடியோ!

sivan family
sivan family

உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சி, நகரமயமாதல், கல்வி மற்றும் கலாச்சார மாற்றங்களால் கூட்டுக் குடும்பங்களில் இருந்து பிரிந்து வந்து தனி குடும்பங்களில் வாழ்கின்றனர். அதாவது சீனா அமெரிக்கா போன்ற அயல் நாடுகளில் தனி குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலும் காணப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக நகரமயமாதல் மற்றும் கலாச்சார மாற்றங்கள் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த நிலை அதிகரிக்காமல் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.  அதோடு இதில் தனி குடும்பங்களை விரும்பி செய்பவர்கள் தங்களது வேலை நிமித்தம் காரணமாகவும் நகரமயமாதல் காரணமாகவும் மட்டுமே தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும் ஒருவேளை பெற்றோர்களின் ஒருவர் இறந்து விட்டால் மற்றவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இந்திய நாட்டு ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.


இதை நடைமுறையிலும் நம்மால் காண முடிவதை பார்க்கலாம்! இருப்பினும் திருமணமானவர்கள் பலர் விவாகரத்தை நோக்கியும் செய்கிறார்கள். இந்த விவாகரத்து எண்ணிக்கையும் அயல்நாடுகளை விட இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்றாலும் இந்திய நாட்டிலும் விவாகரத்து இன்னும் அதிகமாக குறைய வேண்டும் திருமணமானவர்கள் மகிழ்வுடன் சகிப்புத்தன்மையுடன் தனது குடும்பத்தை நடத்த வேண்டும் ஏனென்றால் கூட்டு குடும்பத்திலும் சரி தனி குடும்பத்திலும் சரி நம்முடன் வசிப்பவர்கள் அனைவரும் ஒரே விதமான குணத்தை கொண்டிருக்க மாட்டார்கள் இதற்கு உதாரணமாக நம்முடைய ஒரு கையில் உள்ள ஐந்து விரல்கள் அனைத்தும் ஒரே விதமாகவா உள்ளது இல்லை அல்லவா அதேபோன்றுதான் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள் என்று கூறுவார்கள். இந்த வேறுபாடு குடும்பத்தில் மட்டும் நடப்பதில்லை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் சமூகத்தில் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் நம்மை சுற்றியுள்ள ஒவ்வொருவருமே நம்மைப் போன்று இருப்பார்கள் என்று கூறி விட முடியாது அவரவர்களுக்கென்று தனித்திறமைகள் தனி செயல் திறன்கள் பழக்கவழக்கங்கள் உள்ளது.

அதனால் இந்த வேறுபாடுகள் அனைத்தையும் புரிந்து கொண்டு வாழ்க்கையை விட்டுக் கொடுத்து வாழ்வதே ஒரு வெற்றிகரமான வாழ்க்கை என பல மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டுக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக நம் இந்திய நாட்டில் பெரிதும் போற்றப்படுகின்ற ஒரு குடும்பத்திலிருந்தே அற்புதமான எடுத்துக்காட்டை விளக்கக் கூடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், சிவன் பார்வதி குடும்பமான சிவன் பார்வதி விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் புகைப்படத்தை முதலில் பார்க்கச் சொல்கிறார்கள் பிறகு அந்த புகைப்படத்தில் உள்ள ஒரு அற்புதத்தை நமக்கு விளக்குகிறார்கள் அதாவது இந்த குடும்பத்தின் தலைவராக இருக்கக்கூடிய சிவனின் வாகனமாக காளை இருக்கிறது அதே சமயத்தில் தலைவியாக உள்ள பார்வதியின் வாகனமாக சிங்கம் உள்ளது உண்மையில் காளையும் சிங்கமும் எதிரி விலங்குகள் அதோடு சிவனின் முதல் மகனான விநாயகர் வாகனமாக எலி உள்ளது ஆனால் இரண்டாவது மகனான முருகனின் வாகனமாக மயில் உள்ளது. 

அதுமட்டுமின்றி சிவன் தன் கழுத்தில் கோப்ராவை சுமந்து கொண்டிருக்கிறார். இயற்கை ரிதியில் பார்த்தால் எலியை பாம்பும், பாம்பை மயிலும் சாப்பிடக்கூடிய உணவு சங்கிலி தோன்றுகிறது. அதோடு சிவன் இறந்த உயிரினங்களின் தோள்களையும் எரிக்கப்படும் உயிரினங்களின் சாம்பலையும் தன் மீது பூசிக் கொள்வார் ஆனால் பார்வதி தேவியோ தூய்மையானவள், சிவனின் மகனான முருகனுக்கு ஆறுமுகங்கள் இருக்கிறது ஆனால் விநாயகருக்கு ஒரு மனித முகம் கூட கிடையாது யானையின் முகத்தையும் தன் முகமாக கொண்டு உள்ளார். அதிக ஆற்றலை கொண்டவர் முருகன், அதே சமயத்தில் புத்திசாலியாக இருப்பவர் விநாயகர் இப்படி நம் கடவுளாக வணங்குகின்ற ஒரு குடும்பத்திலே இத்தனை வேறுபாடுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் உள்ளது ஆனால் அவர்கள் அதனை தன் குடும்பத்திற்குள்ளே கூறிக் கொள்ளாமல் அதைக் குறித்து சண்டை இடாமல் குடும்பமாக வாழ்கிறார்கள் அதேபோன்று நாமும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சகித்துக் கொண்டு ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளனர். இப்படி நம் தெய்வத்திலிருந்து இத்தனை அழகான ஒரு எடுத்துக்காட்டை கூறி வீடியோ வெளியிட்டுள்ளவர்களுக்கு பாராட்டுகளும் சமூக வலைதளத்தில் குவிந்து வருகிறது மேலும் இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.