24 special

பாடாய் படுத்தும் பிரைடல் மேக் அப்!

pride makeup
pride makeup

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை படித்தால் அந்த குடும்பமே நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அதே போன்று அந்த குடும்பமே படித்ததற்கு சமம் என்றும் கூறுவார்கள் அப்படி ஒரு 20 வருடங்கள் 15 வருடங்களுக்கு முன்பு கூட அதிக அளவில் ஆன பெண்கள் பட்டதாரிகளாக கூட இருந்ததில்லை ஆனால் அந்த காலகட்டத்திலும் பட்டதாரிகளாக மாறி அதிக பட்டங்களை பெற்ற பெண்களும் இருந்தனர் அப்படி மேல்படிப்புக்கு சென்ற பெரும்பாலான பெண்கள் கனவாக ஆசிரியர் பணியும் அரசாங்க வேலையும் வங்கி சார்ந்த வேலையும் இருந்துள்ளது. ஏனென்றால் இந்த பணிகள் அனைத்துமே ஒரு பாதுகாப்பான சூழலில் இருப்பது இதனால் பெண்களைப் பெற்று வளர்த்து வரும் பெற்றோர்களின் மனதிலும் நம்ம பெண் பாதுகாப்பாக தான் இருக்கிறான் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறாள் என்ற ஒரு நம்பிக்கையும் மன நிம்மதியும் கொடுத்து வந்தது. ஆனால் இன்றோ இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது அது தவறு என்று கூற முடியாது ஆண்களுக்கு நிகராக எல்லா துறையிலும் பெண்கள் தங்களது தடங்களை பதித்து வருகின்றனர்.


மேலும் பல பெண்கள் தைரியமாக பல துறைகளில் சாதித்து வருகின்றனர் அதில் தற்போது அதிக சவால்களையும் தங்களது திறமை மட்டுமே நம்பி இறங்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக பேஷன் டிசைன் உள்ளது அதிலும் திருமண பெண்கள் மற்றும் நடிகைகளுக்கு மேக்கப் செய்யும் துறையும் தனியாக உள்ளது. இன்று இந்த துறையில் பெண்கள் பல சாதனைகளையும் பல உச்சங்களையும் தொட்டு வருகின்றனர் ஏனென்றால் பெரும்பாலான திருமண விழாக்களில் மணப்பெண்ணிற்கு மேக்கப் செய்வது வழக்கமான ஒன்று. அதுவும் தற்பொழுது திருமணங்கள் அனைத்துமே பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் செய்யப்படுகிறது திருமணங்களில் ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் மேக்கப்பிற்கு தனி ஒரு தொகை ஒதுக்கப்படுகிறது. எப்படி திருமணத்திற்கான ஆடைகள் அதற்கான ஸ்டிச்சிங் ஒர்க் போன்றவற்றிற்கு தனித்தொகை ஒதுக்கப்படுவதோ அதேபோன்று மணப்பெண் மற்றும் மாப்பிள்ளைக்கும் மேக்கப்பிற்கு என்று தனித்தொகை ஒதுக்கப்படுகிறது.

அந்த மேக்கப்பில் டார்க்காக இருக்கும் பெண்களை கூட மிகவும் பொலிவுடன் வெள்ளையாகவும் இயற்கையான ரூபத்தில் வடிவமைத்து விடுவார்கள் அந்த மேக்கப் லுக் சிலருக்கு அருமையாக புரிந்து இருக்கும் ஆனால் அதே சமயத்தில் சிலருக்கு பொருந்தாமல்  அப்படியே மேக்கப் போடப்பட்டிருக்கிறது என்பதை காட்டிக் கொடுத்து விடும்! இதில் மிகவும் கவனிக்க கூடியது என்னவென்றால் மணப்பெண்ணிற்கு மட்டும் மேக் அப் நடப்பதில்லை மாப்பிள்ளைக்கும் தற்போது மேக்கப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்! அதிலும் குறிப்பாக சில மாப்பிள்ளைகள் மணப்பெண் அறையிலேயே இருந்து தனக்கும் மேக்கப் போட்டே ஆக வேண்டும்! மணப்பெண் மட்டும் வெள்ளையாக இருந்தால் நான் வெள்ளையாக இருக்க வேண்டாமா என்று சண்டை போட்டு மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள். சரி இதெல்லாம் திருமணத்தின் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டாலும் இந்த மேக்கப்பிற்கு செலவழிக்கப்படும் தொகையை கேட்டால் பலரும் தெறித்து ஓடுவார்கள்! அதாவது மேக்கபை மட்டுமே நார்மல் மேக்கப், செமி hd,  அண்ட் எச்டி என்று மூன்றாகப் பிரிக்கிறார்கள் அதே சமயத்தில் மொத்த பேக்கேஜ் சேர்த்து தனி ஒரு தொகையும் நிர்வகிக்கிறார்கள்.

நார்மல் மேக்கப்பிற்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் வரையும் செமி ஹச் டி போன்றவற்றிற்கு 20 ஆயிரம் வரையிலும் ஃபுல் ஹெச்டி மேக்கப்பிற்கு கிட்டத்தட்ட 50,000 வரையும் விலை நிர்ணயிக்கிறார்கள் இந்த விலை அனைத்துமே ஒரு குறைந்தபட்சமான விலை மட்டுமே இவற்றை விட அதிகபட்சமாக கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சம் வரைக்கும் இதனுடைய விலைகள் செல்கிறது. இந்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறது அதாவது நான் முதல் முதலில் மேக்கப்பிற்கு  ஒருநாள் சம்பளமாக 2013ல் 1500 ரூபாய் வாங்கினேன், ஆனால் இன்று ஜிஎஸ்டி உடன் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் வரைக்கும் ஒரு ப்ரைடு கிட்ட மேக்கப்பிற்க்கு வாங்குகிறேன்! 2013 இல் இருந்து 2023 வரை 10 வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவம் நான் வளர்த்துக்கொண்ட எனது திறமை மற்றும் அதற்காக நான் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே தற்போது மாறி உள்ளது. இப்படி நான் எனது 10 ஆண்டுகளில் இவ்வளவு உயரத்தை அடைந்துள்ளேன் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் சமீபத்தில் youtube சேனலில் பேட்டி கொடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.