தமிழ்நாட்டை உலுக்கும் சம்பம் ஒன்று நடந்து வருகிறது. போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும் சினிமா துறையில் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தலைமறைவானது பூதகரமானது. இந்நிலையில், இயக்குனர் அமீரின் இறைவன் மிக பெரியவன் படத்தில் தயாரிப்பாளராக ஜாபர் இருந்து வந்தார். ஆனால், இந்த விஷயம் பெரியதாக பேசப்பட்ட இயக்குனர் அமீர் எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்னை விடுங்கள் ஏன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அமிருக்கும் ஜபருக்கும் உள்ள நெருக்கத்தை பட்டியில் போட்டு வெளியிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.
டெல்லியில், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்கு பின்னணியில் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது விசாரணையில் அம்பலானது தெரிவனத்து. இதன் மூலம் 2000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. சினிமாவில் அமீர், வெற்றி மாறன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார். இதனால் அமீரை சமூக ஆர்வலர்கள் வசைப்பாடி வந்தனர் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமீர் அறிக்கை ஒன்றை அளித்தார். எனக்கும் ஜாபர் சாதிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறினார்.
ஆனால், அமீர்ரின் நாடகத்தை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, 2015ம் ஆண்டு முதல் இருவரும் நெருக்கமாக உள்ளனர் அப்போது அமீர் அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தை இயக்கினார். அந்த நேரத்தில் படத்திற்கு பணம் தேவை பட்ட போது சுமார் 75 லட்சம் வரை ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார். அதன் பிறகு ஜாபர் சாதிக் தொடங்கிய கஃபேவில் அமீரும் பார்ட்னர் ஆக இருக்கிறார். சென்னையில் உள்ள 4 கஃபேவிலும் அமீரும் பார்ட்னர் என தெரிவித்தார். தி.நகரில் இருக்கும் அமீரின் அலுவலகத்திற்கு ஜாபர் தான் வாடகை செலுத்தி வருகிறார். மாதம் சுமார் 3 லட்சம் வரை அமீருக்கு செலவுக்காக குறிப்பிட்ட தொகையை கொடுத்துவந்தார் என கூறினார் சவுக்கு சங்கர்.
இப்படி திருடர்கள் கூட உறவு வைத்து கொள்ளட்டும் ஆனால், சமூகத்திற்கு வந்து ஒரு பிரச்சனை என்றால் நான் தான் உத்தமன் என்பது போல கம்பிரமாக குரல் கொடுத்து பேசுவது நிறுத்தி கொள்ள வேண்டும். அமீர் ஜாபர் சாதிக் யார் என்ற தெரியாது என்பது போல் பேசுவது நான் நம்ப மாட்டேன். நிச்சயமாக ஜாபர் சாதிக் என்ன வேலை செய்கிறார் என்பதை அமீருக்கு தெரியும் என கூறியுள்ளார். இப்போ வந்து நான் நல்லவன் என கூறுவது நியாமல்ல என சவுக்கு சங்கர் அமீரை வசைப்படுத்தியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது சினிமா துறையில் இருப்பவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கைதாகலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஜாபர் சாதிக் செம்மரம் கடத்தல் வழக்கிலும், போதை பொருள் கடத்தல் வழக்கிலும் சிறையில் இருந்து வந்தவருக்கு எப்படி பதவி கொடுக்கப்பட்ட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு காவல் துறை பரிசு வழங்கியது. மேலும், திமுகவில் உள்ளவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்கிறார். அமைச்சர்களும் ஜாபருடன் உறவு கொண்டாடி வருகிறார். வரும் நாட்களில் இது தொடர்பாக திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் கைது ஆகலாம் என கூறப்படுகிறது. அமைச்சர் சேகர்பாபு ஜாபர் சாதிக்கின் ரெஸ்டாரண்டை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாபர் சாதிக் சென்னையில் பிரியாணி கடைகளின் மூலம் போதை பொருட்களை விற்பனை செய்து வருந்துளளர் இது எல்லாம் தெரிந்து தான் திமுகவில் இணைத்து கொண்டார்களா? அல்லது அவர் பணம் கொடுக்கிறார் அதன் காரணமாகவே பின்புலத்தை விசாரிக்காமல் இருந்துள்ளார்களா என கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புலி விவரத்துடன் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் நிச்சயம் திமுகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைத்தனர். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள். இதுவரை தலைமறைவாக இருந்து வருகிறார் ஜாபர் சாதிக்.