சினிமா துறையில் நடிகை நடிகர்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் கூட இயக்குனர்களின் வார்த்தைகளையும் இயக்குனர்கள் கூறுவது போன்று நடித்துக் காட்டி தன் திறமையை வெளிப்படுத்தினால் போதும் ஆனால் நகைச்சுவை நடிகராக ஒருவர் திரையில் வெளிவர ஆரம்பிக்கிறார் என்றால் அவர் தனது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் தான் கூறும் நகைச்சுவை மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் அவர்களின் மனதை புண்படுத்தாத வகையிலும் அமைய வேண்டும் என்பதில் கருத்தாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் சொல்ல வந்த நகைச்சுவை ஒன்று ஆனால் மக்கள் புரிந்து கொள்ளும் கருத்து ஒன்றாக இருந்தால் மக்கள் அந்த நகைச்சுவை நடிகரை விரும்ப மாட்டார்கள் அதனால் அவருக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விடும். எந்த நேரத்திலும் சரளமாக யாரும் சிந்திக்காத வகையிலான ஒரு காமெடியை முன்வைத்து அந்த இடத்தையே சிரிப்பு கொண்டு வருவது ஒரு நகைச்சுவை கலைஞரின் சிறப்பு! அப்படி தன் எதிரில் இருப்பவர் இவ்வளவு பெரியவராக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய உயரத்திலும் அதிகாரத்திலும் இருந்தாலும் சரி அந்த நேரத்தில் தனக்கு ஒரு காமெடி தோன்றியது என்றால் அதை சட்டென்று கூறி அந்த இடத்தை சிரிப்பு மழையில் நனைய வைத்து விடும் நகைச்சுவை நடிகர் தான் கவுண்டமணி.
இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கிராமத்தில் பிறந்த இவர் நாடகங்களின் வழியாக திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் வருவதற்கு முன்பாகவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இவருக்கு இருந்துள்ளது. மேலும் திரைத்துறைக்கு வந்த உடனே இவருக்கு நகைச்சுவை நடிகர் என்ற வாய்ப்பு கிடைக்கவில்லை, சர்வ சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடிக்க ஆரம்பித்த கவுண்டமணி 1970 இல் வெளியான ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இடம் பெற்று நடித்த வாழைப்பழ காமெடி உலகப் புகழ் பெற்றது இந்த காமெடி மற்றும் இப்படத்தில் கிடைத்த மக்களின் வரவேற்பு கவுண்டமணி செந்தில் கூட்டணியை இன்னும் 450 படங்களுக்கு இணைந்து நடிக்க காரணமாக அமைந்தது. அதோடு 1982 பயணங்கள் முடிவதில்லை 1984 இல் வைதேகி காத்திருந்தாள் என்ற படங்களில் கவுண்டமணி செந்தில் இணைந்து நடித்தில் சூப்பர் ஹிட் ஆன காமெடிகள்! இப்படி காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த கவுண்டமணி சில படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார் இருப்பினும் அவருக்கு மக்களை மகிழ்விக்கும் பாத்திரமே மிகவும் கச்சிதமாக பொருந்தியதால் தனது காமெடி பாதியை மட்டும் தொடர்ந்து வந்தார்.
எண்பதுகளில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய கவுண்டமணி சூப்பர் ஸ்டார், கார்த்தி, சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன் மற்றும் விஜய், அஜித் ஆகிருடனும் இணைந்து நடித்த பல ஹிட்டான காமெடிகளை கொடுத்தார். அதுமட்டுமின்றி இந்த நடிகர்களுடன் நடிப்பதை விட சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவருடன் இணைந்து கவுண்டமணி நடிக்கும் பொழுது தனது முழு ஆளுமையை வெளிப்படுத்தி திரையில் மக்களின் கைத்தட்டல்களை பெருமளவில் வாங்குவார். அதாவது மாமன் மகள், தாய் மாமன், நடிகன், திருமதி பழனிச்சாமி போன்ற படங்களில் இவர்களது சிறந்த கூட்டணி வெளிப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தா கவுண்டமணிக்கு எப்பொழுது அவரது இயற்பெயர் சுப்பிரமணியத்திலிருந்து கவுண்டமணி என்று பெயர் மாற்றப்பட்டது என்ன விசாரித்தால் 16 வயதிலே படத்தில் இவரது பெயர் கவுண்டமணி என்று மாற்றப்பட்டதாகவும் அதனை மாற்றியவர் பாரதிராஜா என்றும் கூறப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் youtube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உண்மையில் நான்தான் அவரது பெயரை கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்து விட்டேன், அதற்குப் பிறகு பாலகுரு அண்ணன் தான் என்னிடம் கூறினார் என்ன ஆச்சு எதற்காக கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்தாய் அவரது பெயர் கவுண்டர் மணி ஏன்னா செட்டில் திடீரென்று எதையாவது ஒரு கவுண்டரை கொடுத்துக் கொண்டே இருப்பார். அதனால் அவருக்கு கவுண்டர் மணி என்று தான் நாங்கள் பெயர் வைத்திருந்தோம். நீ என்னவென்றால் கவுண்டமணி என்று கொடுத்துவிட்டாய் என்னுடைய காதில் அதுதான் விழுந்தது அதனால் தான் நான் கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்தேன் என பாக்யராஜ் கூறியதாகவும் இதை நானும் கவனிக்கவில்லை அப்படியே திரையில் ஒளிபரப்பப்பட்டு விட்டது, அன்றிலிருந்து அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படுகிறார் என பாக்கியராஜ் கூறியுள்ளார்.