24 special

ரைட்டு...! எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க..! ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் தேடப்படும் ஆதாயம்..!

udhayanithi, AR Rahman
udhayanithi, AR Rahman

சென்னையில் ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் 7000 டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்க முடியும் என்ற பட்சத்தில் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மூச்சு திணறும் நிலையில் ரசிகர்கள் தவித்து வந்தனர். மேலும் கூட்டத்தில் சில குழந்தைகள் பெற்றோரை விட்டு தொலைந்ததாகவும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் பல புகார்கள் எழுந்தது இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்றால் நிகழ்ச்சி நடத்துபவர்களின் சரியான திட்டமிடல் இல்லாததுதான் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. 


மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கத்திற்குள்ளே நுழைய முடியாத நிலையில் வெளியே நின்று தங்கள் புலம்பலை செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தனர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த இசை நிகழ்ச்சியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் மக்கள் அவதிக்கு உள்ளாக்கப்பட்டு இப்படி பணத்தாசை பிடித்து இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இந்த இசை நிகழ்ச்சி அமைந்து விட்டது என தெரிகிறது.மேலும் நடந்த இந்த தவறு  அனைத்திற்கும் ஏ ஆர் ரகுமான் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமில்லாமல் இவை அனைத்திற்கும் நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்று உறுதி அளித்தார். இவ்வாறு ஏ ஆர் ரகுமானின் நிகழ்ச்சி சொதப்பலில் முடிவடைந்த நிலையில் இதை வைத்து அனைவரும் அரசியல் பேசியும் வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து நிகழ்ச்சியை காண முடியாமல் போன  ரசிகர்கள் அனைவரும் ஏ ஆர் ரகுமான் மீது கோபமடையவில்லை  மாறாக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தும் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்ற ஏக்கத்தில் தான் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹுமானுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி இறங்கியுள்ளது. மேலும் இது குறைத்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தனது பேஸ்புக் பதிவில் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்த ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சில மதவெறி கும்பல்கள் அவரை தவறாக விமர்சித்து வருவதாகவும் ஏ ஆர் ரகுமான் தானாக முன்வந்து நடந்த தவறு அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு இவை அனைத்திற்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறியதுடன் மன கவலையிலிருந்து வரும் நிலையில் வன்மத்தை மனதில் வைத்து அவரை வம்பு இழுக்கும் நோக்கில் செயல்பட்டு வருபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். 

மேலும் மமக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தனது பதிவில் உலக அளவில் சாதனை படைத்தது இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கிய ஏ ஆர் ரகுமானை முஸ்லிம் என்ற காரணத்திற்காக மதவெறி பிடித்தவர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர் என்றும் அவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும், உலக அளவில் இசையை கொண்டு சேர்த்துள்ள உன்னத கலைஞனை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளனர். இவ்வாறு எஸ்டிபிஐ கட்சி மற்றும் மமக கட்சியில் இருக்கும் தலைவர்கள் ஒன்றிணைந்து ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்தது  வேறு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு மதச்சாயம் பூசுவது போல் இருப்பதாக வேறு சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது... ஆனால் இந்த கூட்டத்தில் முதல்வர் வாகனம் வேறு சிக்கியதை யாரும் பொருட்படுத்தவில்லை மாறாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட சிக்கலைதான்  அனைவரும் பேசுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது...