24 special

இன்னும் எத்தனை வருடம் இதே வாக்குறுதி கொடுப்பீர்கள்...? தமிழிசையின் அதிரடி கேள்விகள்..!

Tamilisai, Udhayanithi
Tamilisai, Udhayanithi

நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், களத்தில் தீயாக அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இன்னும் எத்தனை வருடம் தான் இதே வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவீர்கள் என விமர்சனம் வைத்து திராவிட கட்சிகளுக்கு குட் பை சொல்லுங்கள் என விமர்சனம் செய்துள்ளார்.  


                                                                                              

தேர்தல் நடைபெற 12 நாட்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சியினரும் முன்னாள் அமைச்சர்களும் தங்களது தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாப்பூர் சுற்று வட்டார பகுதியில் பேசிய தமிழிசை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியில் அந்த அந்த மாநிலத்தின் உரிமைகள் என தெரிவித்துள்ளது. நீட் தேர்வை ஒரு போதும் ரத்து செய்ய முடியாது ப. சிதம்பரத்தின் மனைவியே தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களே தேர்தல் அறிகையில் கொடுத்திருப்பது சரியா? தப்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

                                                                                             

தென் சென்னையில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழிசை தொடர்ந்து மத்திய அரசின் நல திடங்களை நான் நிச்சயம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் அதிமுக, திமுக வேட்பாளர்க்ளுக்கு வாக்களித்தால் இதே பிரச்சனையை மீன்டும் மக்கள் சந்திக்க கூடும் என தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

                                                                                 

தமிழகத்தில் திமுகவோ மீண்டும் நீட் தேர்வை ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வ்வ்வ்வ்வ்ரு தொகுதி வாரியாக அனிதாவின் புகைப்படத்தை கையில் எடுத்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதிலும் உதயநிதிக்கு தமிழும் சாரியாக சொல்ல தெரியாமல், ஆங்கிலமும் சரியாக பேச தெரியாமல் அனிதாவின் மதிப்பெண்ணை தவறாக கூறி வருவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. திமுகவின் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதனால் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னேறி வருகிறது.

                                                                               

அதேபோல், நேற்று தூத்துக்குடி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழியிடம் மக்கள் தமிழிசை குறித்து கேள்வி எழுப்பினார் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக இருந்த தமிழிசை 2024 நாடளுமன்ற தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்து விட்டு தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், அங்கு மீண்டும் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார். 

                                                                                 

அவர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபடும் போது மக்கள் தமிழிசை எங்கே என்ற கேள்வியை எழுப்பிள்ளனர். இதற்கு சிரித்தபடியே கனிமொழி தமிழிசை அவர்கள் இந்த முறை தென் சென்னயில் போட்டியிடுகிறார் என கூறினார். ஒரு தேர்தலில் போட்டியிட்டதற்கு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறார்கள் மக்களுக்கு தமிழிசை மீது என்ன ஒரு பாசம் அவர் செய்த பணிகள் அவ்வளவு என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.