24 special

இப்போ அதே வார்த்தையை சொல்லமுடியுமா?...உதயநிதிக்கு பாஜக கேள்வி!

Udhayanidhi, Amarprasad Reddy
Udhayanidhi, Amarprasad Reddy

தமிழகத்தில் கடந்த 4ம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் குறிப்பாக சென்னையை திருப்பி போட வைத்தது இந்த மழையின் சேதத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தொய்வை ஏற்படுத்தி வருகிறது. போதிய பேரிடர் மீட்ப்பு குழு இல்லாததால் மத்திய அரசிடம் உதவியை நாடியதை. இந்நிலையில் ஹிந்தி தெரியாது போடா என திமுக இப்போது கோஷம் போடமுடியுமா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.


கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மழையின் தாக்கம் சென்னையில் இயல்பு வாழ்கை திரும்பாமல் இருந்து வருகிறது, முன்னதாக 4000 ஆயிரம் கோடி தொகையில் மழை நீர் தேங்காதா அளவிற்கு பணிகள் முடிவடைந்து விட்டதாக அமைச்சர்கள், முதலமைச்சர்கள் கூறினர். எவ்வளவு மழை வந்தாலும் நிற்காது என அமைச்சர்கள் பொது மேடையில் பேச தொடங்கினர். ஆனால், இப்போது சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் நின்று வருகிறது. இதனை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர் . இந்நிலையில் மத்திய அரசிடம் நிவாரண தொகை வேண்டியும் வாடா மாநிலத்தில் இருந்து மீட்பு குழுக்களை அனுப்பவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதன் பேரில் மத்திய அரசு வடமாநில மீட்பு குழுக்களை அனுப்பியது அவர்கள் சென்னைக்கு வந்து மழை நீரில் சிக்கியவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அபார்ப்படுத்த துரிதமாக செயல்படுத்தி வருகின்றனர்.

பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, எதை செய்தாலும் தவறு என்று சொல்வதையே பால பாட அரசியலாக கருதி செயல்படும் திமுக அரசும், திமுகவினரும், மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்ப்பதோடு, அதன் வாயிலாக ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்தியை புகுத்தும் நடவடிக்கை என்று விமர்சித்தனர். தானும் எதிர்ப்பு தெரிவிப்பது போல, 'ஹிந்தி தெரியாது போடா' என வாசகம் பொறிக்கப்பட்ட, 'டி ஷர்ட்' அணிந்து, அமைச்சர் உதயநிதி வலம் வந்தார். எதற்கெடுத்தாலும், ஹிந்தி எதிர்ப்பு கோஷத்தை கையில் எடுக்கும் திமுகவினருக்கு இயற்கையே பதிலடி கொடுத்துள்ளது. புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற, தி.மு.க., அரசால் முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினரை, தமிழக அரசு வருந்தி வருந்தி அழைத்து வந்துள்ளது.

ஏராளமான வட மாநில வீரர்கள், சென்னை வந்துள்ளனர். அவர்கள் தான், ஹிந்தி மொழி புரியாத மக்களை காப்பாற்றி வருகின்றனர். 'ஹிந்தி தெரியாது போடா' என்ற பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதியால், அந்த வீரர்களை நோக்கி, அதே வாசகத்தை சொல்ல முடியுமா? அப்படி சொன்னால், அவர்களால் காப்பாற்றப்பட்ட மக்கள் உதயநிதியை சும்மா விடுவரா? மனிதாபிமான உதவி என்று வரும்போது மொழி முக்கியம் இல்லை. கூடுதலாக ஒரு மொழி கற்றிருந்தால், அந்த வீரர்களோடு உணர்வு ரீதியில் தங்கள் கருத்துக்களை சென்னை மக்கள் புரிய வைத்திருப்பர். அந்த வீரர்கள், உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் குறியாக இருந்தனரே தவிர, ஹிந்தி பேசும் மக்களா என, பிரித்து பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.