24 special

மழை வெள்ளத்துடன் சேர்த்து அறிவாலயத்திற்கு இடியை இறக்கிய செய்தி....! தலைகீழாக மாறிய I.N.D.I கூட்டணியின் நிலைமை

udhayanithi, i.n.d.i.a kootani
udhayanithi, i.n.d.i.a kootani

கடந்த ஜூலை 18ஆம் தேதியன்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து தற்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி அன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது அதற்குப் பிறகு இந்த கூட்டத்தின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தான் இந்த கூட்டணிக்கு I.N.D.I என்று பெயர் இடப்பட்டது. அதற்குப் பிறகு இதன் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.


இந்த மூன்று கூட்டங்களில் முதல் இரண்டு கூட்டம் சில உக்கட்சி சண்டைகளால் முடிந்ததாகவும் சரிவர முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அதற்குப் பிறகு இதன் மூன்றாவது கூட்டத்தில் இந்தியாவில் நடைபெற இருந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த கூட்டணி ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடியை எதிர்ப்பதையே ஒரு நோக்கமாகக் கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் பாஜக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கைகளை தவறாக சித்தரித்தும் போலி செய்திகளை பரப்பும் நடவடிக்கைகளிலும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈடுபட்டு வந்தது என பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது.. இந்த நிலையில் கடந்த மாதத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக மூன்று மாநிலங்களில் வெற்றியை பதிவு செய்தது.

பாஜகவின் இந்த மூன்று மாநிலங்களின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம் உதயநிதியின் சனாதன பேச்சு என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் பாஜக தரப்பில் அமைச்சர் உதயநிதி சனாதன குறித்து பேசிய கருத்துக்களை முன்வைத்தே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக உதயநிதி சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தபொழுதே இந்தியா முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு உதயநிதியின் பேச்சுக்கு I.N.D.I  கூட்டணி தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படாது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இப்படி இருக்கும் சமயத்தில் நடைபெற்ற ஐந்து மனிதர்களின் தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, I.N.D.I கூட்டணியின் நான்காவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறும் என்று கூட்டணியின் தலைமை தரப்பில் தகவல்கள் வெளியான நிலையில் அக்கூட்டணியின் முக்கிய தலைவர்களான மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் போன்றோர் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை என்றும் தனக்கு காய்ச்சல் இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தகவல்களை தெரிவித்ததால் I.N.D.I கூட்டணியின் நான்காவது கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டத்தை மறைமுகமாக புறக்கணித்த இந்த மூவரும் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு பற்றி கூறும் பொழுது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் போன்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது உதயநிதியின் சனாதான பேச்சு தான் தோல்விக்கு முக்கிய காரணம் முதலில் திமுகவை இண்டி கூட்டணியில் இருந்து வெளியே அனுப்புங்கள் அப்பொழுது தான் நாங்கள் கூட்டணியில் இருக்க முடியும் என்று பிற கட்சிகள் போர் கொடி தூக்கியதே காரணமாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது இப்படி திமுகவை I.N.D.I கூட்டணியில் இருந்து விரட்டி அடிக்க பல மாநில தலைவர்கள் முயன்று வருவது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.