24 special

மழைநீரில் கலந்த கழிவுநீரும் கச்சா எண்ணெயால் துர்நாற்றம்...!மூச்சு விடவே சிரமம்.. களமிறங்கிய விஜய் ரசிகர்கள்...!

mk stalin, actor vijay
mk stalin, actor vijay

மிக்ஜாம் புயல் அடித்து தொய்த்து சென்னையை ஒரு வழி ஆக்கிய பின் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில், சென்னையில் மழை நின்று நான்கு நாட்கள் கடந்தும் தற்போது வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால் இடுப்பளவிற்கு மழைநீர் சேர்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் தற்போது வரை உள்ளது. வாகனங்கள் பழுதாகி காணப்படுகிறது. கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் நம்மை கதிகளங்க வைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், ஆளும் திமுக அரசின் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் என யாரும் உதவி செய்ய முடியாத நிலையே உள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்நிலையில், மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ள எண்ணூரில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து கச்சா எண்ணையும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து வருவதால் எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறிக் காட்சி அளிக்கிறது. தேங்கியுள்ள வெள்ளநீரில் ஏற்கனவே கழிவு நீர் கலந்துள்ள நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரில் எண்ணெய் கலப்பதாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம். இந்த ஆயில்  நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.

ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்  . இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.இதனிடையே வாழ்த்துகள் விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு, என பதிவிட்டுள்ள மோகன் ஜி. இதனுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் அப்பகுதி மக்களுக்கு உணவு கொடுப்பதற்காக இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பயணம் செய்கிறார். அதில் கச்சா எண்ணெய் கலந்து இருப்பதால் அப்பகுதியே கருப்பாக காட்சி அளிக்கிறது. அந்த வீடியோவில் பேசிய அந்த நபர், “தண்ணீர் கேட்டாங்கன்னு எடுத்துட்டு வந்தோம். இங்க பாருங்க எவ்வளவு கெமிக்கல் மிதக்குதுன்னு, எத்தனை வீடுகள் இருக்கு யாரும் இங்க இருக்குற மக்களை கண்டுக்கல.

இங்க இருக்குற மக்கள் எனக்கு போன் பண்ணாங்க, நாங்க விஜய் மக்கள் இயக்கத்துல இருக்கோம்.  ஹெல்ப்ன்னு பன்னுங்க சொல்லி கேட்டவுடனே ஓடோடி வந்து செய்கிறோம் என்றும். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த வீடியோவில்,  திமுகவிற்கு  இனி எந்த காலத்திலும் ஓட்டு போட மாட்டோம் என்றும்,  ஓட்டு கேட்டு வரும் போது மட்டும் எட்டி பார்த்த திமுகவினர், தற்போது இந்த கச்சா எண்ணெய் கலந்த நீரில் என்ன செய்வது என்று வழி தெரியாமல் இருக்கும் தங்களை பார்க்க ஆளும் திமுக அரசின் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  மேலும் கடந்த ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் சரி, தற்போது ஆளும் திமுக அரசுக்கு மாற்றாக வேறு கட்சியின் ஆட்சியை மக்கள் வரவேற்க  தயாராகி விட்டனர். இதுமட்டுமின்றி எந்த வொரு கட்சியும் இல்லாத விஜய் மக்கள் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.