24 special

இனி செந்தில்பாலாஜியை காப்பாற்றவே முடியாது ....! செந்தில் பாலாஜியை கழட்டி விட்டு திமுக

Senthil balaji,enforcement
Senthil balaji,enforcement

அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் முக்கிய பதவியில் இருந்து வந்தவர். ஐந்து கட்சிகளிலிருந்து மாறி இறுதியாக திமுகவில் தஞ்சம் புகுந்த செந்தில் பாலாஜி  2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் மது ஆயத்தீர்வு துறை அமைச்சராக பொறுப்பேற்று பதவி வகித்தார். 


இரண்டு மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களையும் கைப்பற்றிய நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்ததால் அவர் பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் நீதிமன்ற வழக்குகள் மேல்முறையீட்டு மனுக்கள் என செந்தில் பாலாஜி வழக்கில் திடீர்  திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்யலாம் என்று அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது. 

இந்த தீர்ப்பு செந்தில் பாலாஜி தரப்பில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியவுடன் அமலாக்க துறையின் தொடர் முயற்சியால் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்யலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டது

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு  செந்தில் பாலாஜியை வெளியில் எடுப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டாலும் அவர்களின் முயற்சி பலிக்காத நிலையில் தற்போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.ஆனால் செந்தில் பாலாஜி இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் தலை வலிக்குது என்னால் முடியல என்று தொடர்ந்து கூறி வருகிறார் என அமலாக்க துறை தரப்பு கூறி வருகின்றனர். 

இவ்வாறு அமலாக்க துறை வசம் செந்தில் பாலாஜி சிக்கியது முதல் அவரது வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் தொடர்ந்து அவருக்கு தீவிர தண்டனை கிடைக்கும் என்று அமலாக்கத்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார், மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் செய்தியாளரில் ஒருவர் செந்தில் பாலாஜி குறித்து கேள்வி எழுப்பிய போது 'உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும்' என்று கூறியது செந்தில் பாலாஜி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செந்தில் பாலாஜி திமுக ஆட்சியில் இரண்டு துறைகளை கையில் வைத்து பணியாற்றி வந்ததுடன் வேறு எந்த அமைச்சரும் இரண்டு துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகிக்கவில்லை, அப்படி முக்கியமான செந்தில் பாலாஜியையே தற்போது திமுகவின் மூத்த அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செந்தில் பாலாஜி குறித்து உப்பு தின்னும் தண்ணீர் குடிக்கணும் என்று கூறியது செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் உள்ள முக்கிய அமைச்சரே செந்தில் பாலாஜி குறித்து இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது செந்தில் பாலாஜி இனி அவ்வளவுதானா திமுக செந்தில் பாலாஜியை கைகழுவி விட்டதா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி விவகாரத்தில் முன்னேறி வருவதால் இனி திமுக தரப்பு செந்தில்பாலாஜியை காப்பாற்ற முயற்சி எடுக்காது எனவும் சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.