24 special

இனி வேலைக்கு ஆகாது ....! செந்தில் பாலாஜி விஷயத்தில் ஒன்னும் மாறப்போவது இல்லை...!

Senthil balaji,enforcement
Senthil balaji,enforcement

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக நேற்று காலை 9 மணியில் இருந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அமலாக்கத்துறையின் அதிகாரிகள் காலையில் தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் செந்தில்பாலாஜி வழக்கின் மீதான ஆவணங்களை வைத்து அதிகாரிகள் அவரிடம் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் செந்தில் பாலாஜி வந்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் இனி அமலாக்கத்துறை என்ன வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அமலாக்கத்துறை யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன..!

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையில் இரண்டு பேர் விசாரணை அறைக்கு வெளியிலேயே நிற்க தொடங்கி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.. அவர்கள் இருவரில் ஒருவர் கையில் பெரிய சூட் கேஸ் ஒன்றும் உள்ளது என்றும், இவர்கள் யார்? எதற்காக இவர்கள் நிற்கிறார்கள்? யார் நிற்கவைத்தது என்ற குழப்பம் தற்போது அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணையின்போது கடத்த முறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்யும் நிலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி போன்று மீண்டும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினால் இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. விசாரணை அறைக்கு வெளியே நிற்கும் அவர்கள் இஎஸ்ஐ மருத்துவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் வெளியே நிற்கிறார்கள். உள்ளே சென்றால் விசாரணையில் கேட்கப்படும் விஷயங்கள் கசியும் என்பதால் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் சிகிச்சை நடந்தது. அது போன்ற சமயங்களில் இப்போது விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு உடலநலக்குறைபாடு, ரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் எனவே அவசர தேவைக்காக மருந்துகளோடு மருத்துவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் செந்தில் பாலாஜியை தினமும் விசாரணை முடிந்ததும் தூங்க செல்வதற்கு முன் ஒருமுறை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.

மேலும் இந்த முறை அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் கடந்த முறை நடந்த போன்று எந்த ஒரு தவறும் நடந்துவிடக்கூடாது என்று அமலாக்கத்துறை தெளிவாக இருக்கும் காரணத்தினால் இந்த முன்னேற்பாடுகள் என்றும் இந்த முறை விசாரணையை முடித்து கண்டிப்பாக அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறை கறந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் அமலாக்கத்துறை மறுபுறம் எப்படியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரையும் இந்த விசாரணையில் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என தீவிரமாக தனது நடவடிக்கைகளை விரைவுபடுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இரண்டு மருத்துவர்களை வைத்துக் கொண்டு இந்த முறை அமலாக்கத்துறை அதுவும் இ எஸ் ஐ மருத்துவர் வைத்துக்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என செந்தில் பாலாஜி தரப்பு சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லையாம்! இப்படி அமலாக்கத்துறை இந்த முறை என்பதிலும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக உறுதியாக இருப்பதாகவும் கூறுகின்றனர், செந்தில்பாலாஜியின் மனைவி மற்றும் செந்தில்பாலாஜி தரப்பினர் வேறு எந்த சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இனி வேலைக்காகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.