கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது என்று தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் தங்கள் வருத்தத்தை கூறி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருடம் தோறும் தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவு திறந்து விடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையில் கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் எப்பொழுதுமே ஓயாத பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும் நிலையில் கர்நாடகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் பிரச்சனை ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் இதே போல் இந்த வருடமும் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு தராமல் பிரச்சனை செய்து வருகின்றது.
அதை தமிழக அரசும் எதிர்த்து கேட்காமல் இருந்து கொண்டு வருவது மக்கள் மத்தியில் தமிழக அரசின் மீதும் கர்நாடக அரசின் மீதும் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வர வேண்டிய தண்ணீர் சரியாக வராததால் காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகள் ஆடி மாத அறுவடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவுஅளவு நீர் திறந்து விடப்பட்டதால் அதை நம்பி இந்த ஆண்டு நீர் திறந்து விடப்படும் என்று எண்ணி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் 80 ஆயிரம் ஏக்கரில் நெல் பையிரிட்டனர்.
ஆனால் தற்பொழுது மேட்டூர் அணையில் இருந்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நீர் திறக்கப்படுவதால் குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் நிலையில் திருவாரூரில் விவசாயிகள் சாகுபடி பயிர்களை சாகுபடி செய்ய இயலாத நிலையில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.மேலும் திருவாதவூர் என்ற கிராமத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500 ஏக்கருக்கு மேலாக நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதால் அவைகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்த நிலையில் கொஞ்சம் வசதி படைத்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு எஞ்சின் மூலம் நெற்பயிர்களை தண்ணீர் விட்டு பாதுகாத்து வருகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்கள் உயிர் வாழ்வதற்கு பயன்படும் விவசாய நிலங்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் அழிக்கப்பட்டு வருவதை கொஞ்சம் கூட திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதுடன் அதற்கான தீர்வை கண்டுபிடிக்காமல் மெத்தனமாக இருந்து வருவதை குறித்து டெல்டா பகுதி விவசாயிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சோழங்க நல்லூர் பகுதியில் பெண் விவசாயி ஒருவர் விளைநிலங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடப்பதால் அதில் உள்ள கலைகளை எடுப்பதற்கு வாளி மூலம் தண்ணீர் கொண்டு விளைநிலங்களில் தெளித்து வந்த காட்சி விவசாயிகளின் தற்போதைய மோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து அந்தப் பெண்மணி கூறுகையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதால் பயிர்கள் அனைத்தும் வாடிய நிலையில் இருப்பதாகவும் பின் களைகளை எடுப்பதற்கு 50 ஆட்களை கொண்டு எடுத்தாலும் அதில் எந்த பயனும் இல்லை என்றும் தண்ணீர் வரும் நேரத்தில் என்ஜின் கொண்டு நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் அந்த டீசல் விலை கூட எங்களுக்கு கிடைக்காது என்று மன வருத்தத்துடன் புலம்பியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொந்த ஊரான திருவாரூரில் விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் திமுக அரசு கடும் பின்னடைவை சந்திக்கும் எனவும், மக்கள் ஆளும் அரசு மீது கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று பறந்துள்ளது தலைமை செயலகத்திற்கு. இப்படி தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்....!