எதிர் கட்சிகள் கூட்டணி விஷயத்தை வைத்து எப்படியும் பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என பாஜகவிற்கு எதிராக 16 கட்சிகள் கூட்டணி சேர்ந்த நிலையில் பெங்களூரில் நடைபெற இருந்த கூட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் சொல்ல போனால் தேவையில்லாத வேலை செய்து விட்டோம் என புலம்பி இருக்கிறார் முதல்வர் என்கின்றன இரண்டு நாட்கள் நடைபெற்ற சம்பவத்தை அறிந்தவர்கள்.
மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் சிவ குமார் தெரிவித்தது யாரை பதித்ததோ இல்லையோ தற்போது முதல்வர் ஸ்டாலினின் அரசியல் திட்டங்களை தவிடு பொடியாக்கி இருக்கிறது.
அண்ணாமலை நேற்றைய தினமும் சரி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போதும் சரி முதல்வர் ஸ்டாலின் எதிர் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூர் போக கூடாது எனவும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என சொல்லும் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் சிவகுமாரை கண்டிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் பெங்களூர் செல்லும் உங்களை நாங்கள் பாஜக தொண்டர்கள் மீண்டும் தமிழகம் உள்ளே விட மாட்டோம்,38 எம் பி எதற்கு இருக்கீர்கள் நேரே பெங்களூரு சென்று எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் இனியும் வாய் திறக்காமல் இருக்க முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற இருந்த எதிர் கட்சிகள் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது பாஜக மேகதாது விஷயத்தில் தமிழகத்தில் பெரிய பிரச்சனையை உண்டாக்கு கிறது இதே நிலையில் எங்கள் முதல்வட் கர்நாடக வந்தால் அது அரசியல் ரீதியாக பெரும் பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதால் வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி திமுக பேச தற்போது பெங்களூரு கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ஒரு காலத்தில் காவேரி முல்லைப்பெரியாறு போன்ற மாநில பிரச்சனைகளை திமுக தங்களுக்கு சாதகமாக அரசியல் காரியங்களை நகர்த்திய நிலையில் தற்போது அண்ணாமலை நேரடியாக முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு நில்லாமல் நடத்தியும் காட்டி இருப்பது திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரை புலம்ப வைத்து இருக்கிறதாம்.
மேகதாது விஷயத்தை வைத்தே காங்கிரஸ் கூட்டணியில் திமுகவை சேராவிடாமல் செய்ய போகிறார்கள், அரசியலில் சின்ன பய சின்ன பய என சொல்லிட்டு இருந்தால் இனியும் வேலைக்கு ஆகாது, திமுகவின் எதிர் கட்சிகள் கூட்டணி என்ற திட்டதையே சுக்கு நூறாக மாற்றி விட்டாரே என புலம்ப தொடங்கி இருக்கின்றனராம் உடன் பிறப்புகள்.