தமிழ்நாட்டில் ஒரு அரசியல் விமர்சகராகவும், ஊடகவியலாளராகவும் இருந்து சவுக்கு டாட் நெட் மற்றும் சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்தி அதில் அரசியல் தலங்களில் ஏற்படும் சம்பவங்கள் குறித்து பதிவு செய்து முக்கிய கருத்துகளை தெரிவித்து வந்தவர் தான் சவுக்கு மீடியா என்னும் ஊடகத்தின் தலைவரான சவுக்கு சங்கர்!!! இவர் தொடர்ந்து அரசியலில் ஏற்படும் சம்பவங்களை முன்கூட்டியே நடக்கவிருப்பதை கூறி அந்த சம்பவங்கள் நிஜமாகவே நடக்கும் அளவிற்கு பலமுறை நடந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாக இருந்துள்ளது. மேலும் இவர் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்து வந்ததும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் புகார் அளித்ததை தொடர்ந்து ஐ பி சி பிரிவுகள் 294 பி கீழ தகாத வார்த்தையில் பேசுதல், 509 சட்டத்தின் கீழ் பெண்களை அவதூறாக பேசுவது, 353 சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளை மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி அவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 67 இன் கீழ் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற வழக்குகள் சவுக்கு சங்கர் மீது போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே பலமுறை இவரிடம் ரகசிய விசாரணைகளும் போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
மேலும் சவுக்கு சுந்தரை கைது செய்யும் பொழுது அவருடன் இரண்டு நபர்கள் இருந்ததாகவும் அவர்களிடமிருந்தும், சவுக்கு சுந்தரியின் காரில் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்ததாகவும், அரை கிலோ அளவிற்கு கஞ்சா சவுக்கு சங்கரின் காரில் இருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சமீபத்தில் சவுக்கு சங்கரை போலீசார் வானில் அழைத்து வரும்பொழுது கை உடைந்து போன நிலையிலும் அடித்து, அதை மற்றொரு போலீசார் வீடியோ எடுத்து ஷேர் செய்ததாகவும் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். இதுவும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு பிரச்சனையில் சவுக்கு சங்கரின் பெயர் அடிபட்டுள்ளது. அது என்னவென்றால்...
இந்த நிலையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் மேலும் பல பிரபலங்களுக்கு கொக்கைன் சப்ளை செய்வதாக பரணி மற்றும் சையத் நிவாஸ் ஆகிய இருவரையும் சமீபத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில்லில் சமீபத்தில் நைஜீரியன் நாட்டை சேர்ந்த லியோனார்டு என்னும் நபரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இவ்வாறு மூன்று லட்சம் மதிப்புடைய 30 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட செய்து வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஏற்கனவே பல பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் இருந்து வரும் சமயத்தில் மீண்டும் தற்போது இதுபோல ஒரு வழக்கு பதிவாகி இருப்பது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு கொக்கைன் வழங்கி வருகிறார் என்று கூறுகின்றனர். இதனால் சினிமா வட்டாரமும், அரசியல் வட்டாரமும் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது!! இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது