நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தேர்தல் முடிவுகள் வெளியானது. தேர்தல் முடிவில் பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியில் இருக்கும் ஒருவர் குறைவான வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் சாதனையை பிரதமர் மோடி சரித்திரம் படைத்துள்ளார்.
தென் மாநிலங்களில் நீண்ட காலமாக பலவீனமான கட்சியாக இருந்து வரும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி நாற்பதுக்கும் நாற்பது தொகுதிகளை கைப்பற்றியது. தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் சூராவளி பிரசாரம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றியை பிடிக்க முடியவில்லை ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எத்தனை இடத்தில வெற்றி என்பது முக்கியமில்லை பாஜக இந்த முறை தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வாக்குகள் பெரும் என கூறியபடி தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்குகளை பெற்றுள்ளது.
அன்டை மாநிலமான, கேரளாவில் காங்கிரஸின் கோட்டையாகத் தொடர்ந்து வந்தாலும், பாஜக தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. இதுவரை காலூன்ற முடியாத கேரளாவில், பாஜக திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும் இந்த முறை மக்கள் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதனை எதிர்பார்த்து நான் வரவில்லை கேரளா மற்றும் அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையானவற்றை நிறைவேற்ற முயற்சிப்பேன் என கூறினார். இந்த வெற்றி பாஜகவின் முதல் படியாகவும் அந்த மாநிலத்தில் கடந்த தேர்தலை விட இம்முறை ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மாநிலத்தில் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் பாஜகவின் ஆதிக்கம் சரிவதாக எதிர்ப்பார்த்த நிலையில், பாஜக மீண்டும் அதை தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் பாஜக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி பாஜகவுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்த நிலையில் அங்கும் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், பாஜக 3 இடங்களையும், ஜனசேனா கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றியை தக்க வைத்தது. இதனால் தென் மாநிலங்களில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. பாஜக ஒவ்வொரு மாநிலத்தில் தனது வெற்றியை பதித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே தற்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலைமையும், மற்ற மாநிலங்களில் காங்கிரசின் கோட்டையை தகர்த்தி பாஜக வாக்கு சதவீதம் மற்றும் எம்பியை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.