24 special

கொங்கு பகுதியில் வெற்றி வாய்ப்பு... வெளியான முடிவுகள்..!

MKSTALIN , EDAPADI, ANNAMALAI
MKSTALIN , EDAPADI, ANNAMALAI

லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன, இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலை பொறுத்தவரை நாற்பதுக்கு நாற்பதும் திமுக வெற்றி பெரும் என்ற கருத்து கணிப்புகள் சமீபமாக வெளியானது. ஆனால், தற்போது தனியார் தொலைக்காட்சி பல்வேறு இடங்களில் நடத்திய கருத்து கணிப்பில் குறிப்பாக கொங்கு மண்டல பகுதியில் யாருக்கு வெற்றி வாய்ய்பு என்பது ஆச்சர்யமான முடிவுகள் வந்துள்ளதாம்.பாஜக கட்சி கொங்கு மண்டலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அதிமுக கொடி கட்டி பறந்த நிலையில் அந்த இடத்திற்கு பாஜக தன் வசமாக மாற்றியுள்ளது. இதனால், பாஜக கொங்கு மண்டலத்தில் தனது முக்கியமான தலைவர்களையே இந்த முறை போட்டியிட வாய்ப்புகள் வழங்கியுள்ளது. அதன்படி, கோவை மக்களவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். திருப்பூர் தொகுதியில் முருகானந்தம் போட்டியிடுகிறார். 


இப்படி கொங்கு மண்டலத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் குறிப்பாக அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதால் அங்கு டப் பைட் இருப்பதாக ஊடகத்தில் தகவல் வெளியாகிறது. ஆனால், கபவியில் மக்கள் இடத்திலும் இளைஞர்கள் இடத்திலும் அண்ணாமலை பெயர் இடம்பெற்றுள்ளதால் அண்ணாமலை கோவையில் வெற்றி பெறுவது சத்தியமாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. காரணம் அண்ணாமலை படித்தவர் திறமையானவர் அவர் ஊழலை எதிர்க்கிறார் என்றும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து மாற்றத்தை ஏற்படுத்தலாம் என முடிவெடுத்துவிட்டார்களாம்.அதேபோல் கொங்கு பகுதியான பொள்ளாச்சியில் பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக அந்த சர்வேயில் தகவல் வந்துள்ளது. அதாவது, அரசியல் தலைவர்களில் இருந்து மக்கள் வரை எல்லோரும் கோயம்பத்தூர் அரசியலை உற்று நோக்கி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சம்பவம் செய்து வருகிறாராம். பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் திமுகவை விட அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், திருப்பூரில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு போட்டியாக இருப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இப்படி கொங்கு பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிகரித்துள்ளதால் கொங்கு மண்டலத்தில் இருந்து யார் அமைச்சராக போக போகிறார் என்றும் பாஜக வேட்பாளர்கள் வெற்றியை தாண்டி யார் அமைச்சர் பொறுப்பேற்க போகிறார் என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. இதனால் பாஜக போட்டியிடும் கொங்கு மண்டலத்தை தவிர 20க்கும் மேற்ப்பட்ட இடத்தில் திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய போட்டியாக பாஜகவினர் ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது நாற்பது தொகுதியிலும் திமுக வெற்றி பெரும் என்பதை எந் தலைவர்களும் கூறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.