சினிமா வட்டாரங்கள் என்றாலே அதில் எப்போதும் பல சுவாரசியமான தகவல்கள் புதிய படத்தின் அப்டேட்டால் இயக்குனர், நடிகை, நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர் என ஒவ்வொரு தரப்பினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்கள் அல்லது அவர்கள் பிரபலமாவதற்கு முன்பு சினிமாவை வருவதற்கு முன்பு நடந்த சில சுவாரசியமான விஷயங்கள், ஒருவரை பற்றி இன்னொருவர் கூறும் சில விஷயங்கள் என ஒவ்வொரு நாளும் புது புது தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் பலரைக் குறித்து பலவிதமான கிசுகிசுக்களும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு தான் வருகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் பொதுவெளியில் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் செய்யும் சில சர்ச்சைக்குரிய செயல்கள் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு புதிய சர்ச்சை குறித்த செய்தி வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு மற்றும் சில நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றவர் ரோபோ சங்கர்! இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் தற்போது முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் அந்த வகையில் ரோபோ சங்கர் காமெடியனாக நடித்த மாரி, வாயை மூடி பேசவும், விசுவாசம் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்கள் ரோபோ சங்கரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இவர் மட்டுமின்றி இவரது மனைவியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற காமெடி ஷோவில் குக்காக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். அதோடு ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மாளாக நடித்து பல பாராட்டுகளை பெற்றார்.
மேலும் விருமன் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையிலேயே சில காலங்களாக ரோபோ சங்கர் சினிமாவில் தென்படாமலும் வெளிவராமலும் இருந்து வந்தார் அப்போது திடீரென்று அவர் உடல் எடை குறைந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது அதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து இது ரோபோ சங்கர் தானா என்ற பல கேள்விகளை முன்வைக்க, குடி பழக்கத்தாலே அவருக்கு இது போன்ற உடல்நிலை ஏற்பட்டுள்ளது என்ற பல வகையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது ஆனால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாலே ரோபோ சங்கரின் உடல்நிலை குறைந்தது என தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து தற்போது மீண்டும் அவர் திரைகளில் தெரிய ஆரம்பித்து வருகிறார்.
இந்த நிலையில் ரோபோ சங்கர் மகளான இந்திரஜாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்டு கடந்த 24ஆம் தேதி திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அதாவது இந்திரஜாதாவது உறவு முறையில் மாமாவாக உள்ள கார்த்திக்கையே காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார். மேலும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சங்கீத் என்ற நிகழ்ச்சியையும் இவர்கள் நடத்தியது சமூக வலைதளங்களில் சில விமர்சனங்களையும் பெற்றது. இதனை தொடர்ந்து அவரது திருமணத்திற்கு பிறகு சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது, அத்திருமண நிகழ்ச்சியில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மருமகன் செய்த செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும் இந்திரஜாவின் கணவர் கார்த்திக்கும் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ரோபோ சங்கரின் மனைவிக்கு கார்த்திக் உதட்டில் முத்தமிட்டுள்ளார்! இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் மாமியாருக்கு யாராவது இப்படி கொடுப்பார்களா என்ற கேள்விகளும் வலுவெடுத்து வருகிறது மேலும் கடுமையான விமர்சனங்களும் இதற்கு முன்வைக்கப்படுகிறது.