நடிகை டாப்ஸி ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் மடித்து வரும் ஒரு முன்னணியான நடிகையாக ஆவார். 2010 இல் முதல் முதலாக தெலுங்கு திரைப்படமான ஜும்மண்டி நாடம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் தனுஷ் உடன் சேர்ந்து நடித்து ஆடுகளம் என்னும் திரைப்படத்தில் தமிழ் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய ரோல் மிகவும் சூப்பராகவே அமைந்திருந்தது. அது அதிக அளவில் இளைஞர்களை இவர் பக்கம் திரும்ப செய்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர் கூட்டமே தனியாக உருவாகினர். அதன் பின் தமிழில் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி என்னும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பின் கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாகவும், அதிக அளவில் மக்களின் வரவேற்பை பெற்றதாகவும் அமைந்திருந்தது.
சமீபத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து ஜன கன மன எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அதில் வெற்றியும் கண்டு வந்து கொண்டிருக்கும் டாப்ஸி யாருக்கும் தெரியாமல் தற்போது ஒரு காரியம் செய்துள்ளார்!! அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா???பல வருட காலமாக டென்மார்க்கை சேர்ந்த பாட்மிட்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வந்துள்ளார் டாப்ஸி!! இந்த நிலையில் தனது காதலரான மத்யாஸ் ஐ ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். ஆனால் இவருடைய திருமணம் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாத நிலையில் இவருடைய திருமணம் நடந்துள்ளது. அந்த ரகசிய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சில திரைப்பட பிரபலங்கள் மட்டுமே கலந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. திருமணம் முடிந்ததை பற்றி எந்த செய்தியும் வெளியாகாத அளவுக்கு எந்த ஒரு புகைப்படமும் இணையத்தில் பதிவிடாமல் டாப்ஸி ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்று புரியவில்லை!!
இந்த நிலையில் தற்போது டாப்ஸி மற்றும் மத்யாஸ் போ திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் ஜாலியாக நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அமைந்திருப்பது பார்க்க முடிகிறது. மேலும் இவர் திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகிறது. ஆனா இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பாலிவுட் திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த டாப்ஸி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அதிக அளவில் ரசிகர்களை பெற்று வந்தவரின் திருமணத்தை அவர்களின் ரசிகர்களிடம் இருந்து மறைத்தது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இவருக்கு திருமணம் ஆகி இருக்கும் என்ற தகவல் வெளியானது பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாகவே உள்ளது. இவர் திருமணத்தின் கர்ப்பமாக இருந்தது தான் இவரின் திருமணம் நடந்தது மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல தரப்பினர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக இதற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது எப்போது திருமணம் என்று கேட்டபோது எனது கர்ப்பம் நிச்சயமான பிறகு எனது திருமணம் என்று தைரியமாக கூறியிருந்தார். தற்போது அதுபோலவே நடந்துள்ளது என்று இணையங்களில் பல கமெண்டுகள் எழுதுகிறது!!