
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை கவிதா. தமிழில் தனது 11 வயதில் ஓ மஞ்சு என்ற படத்தின் மூலமாக முதன்முதலாக நடிக்க ஆரம்பித்த இவர் 1976 இல் இருந்து பல தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு இவர் சமீப காலமாக சின்ன திரையில் நடித்து வருகிறார்கள். கங்கா, நந்தினி, என்றென்றும் புன்னகை என்ற முக்கிய சீரியல்களில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை கவிதா விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலும் அஜித்தின் முதல் படமான அமராவதியிலும் இருவருக்கும் தாயாக நடித்தவர். மேலும் எம்ஜிஆர், சிவக்குமார், கமலஹாசன், பிரபு மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
அதற்குப் பிறகு பாஜகவில் இணைந்து தற்பொழுது ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் பரபரப்பாக ஆந்திர அரசியலில் இருக்கக்கூடிய சந்திரபாபுவை குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது கவிதா அந்த பேட்டியில், நானும் ஜெயசுதாவும் காங்கிரஸில் சேர்ந்ததாக யாரோ சந்திரபாபு நாயுடு விடம் சொல்லி இருக்கின்றனர் அந்த சமயத்தில் எனக்கு அரசியல் என்பது என்னவென்றே தெரியாது! இதை தெரிந்து கொள்வதற்காக என் வீட்டிற்கு எம்எல்ஏக்கள் சிலர் வந்து என்னை சந்தித்து சந்திரபாபு நாயுடு சந்திக்க வேண்டும் என சொல்லி நடந்தவற்ற என்னிடம் கூறினர். அப்பொழுதே என் கணவர் அதனை மறுத்து யார் அப்படி சொன்னது என்று கேட்டார், இருப்பினும் எம்எல்ஏக்கள் நேரில் வந்து சொன்னதற்காக நான் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தேன். அந்த சந்திப்பில் நான் காங்கிரஸில் சேர்ந்ததாக எழுந்த வதந்திக்கு சந்திரபாபு நாயுடு என்னிடம் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி போவீர்கள் என கேட்டார்.
அதற்கு நான் அந்த கட்சியில் இல்லை என்றும் எனக்கு அரசியலை வேண்டாம் என்றும் தெரிவித்தேன்.. இருப்பினும் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் உங்களுக்கு எம்எல்ஏ சீட்டு கொடுக்கிறேன் ஒரு பிரபலமான பெண் நீங்கள்! மேலும் உங்களை சார்ந்து இருக்கும் அனைவரையும் நான் ஆதரிப்பதாக இருக்கும் அதனால் நீங்கள் கண்டிப்பாக கட்சியில் இணைய வேண்டும் என்று கூறினார். அந்த நிலையிலும் என் கணவர் அந்த வாய்ப்பை மறுத்தார் ஆனால் சந்திரபாபு நாயுடு எனக்கு ஆதரவாக பேச நான் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தேன். நான் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த பொழுது ஆந்திரா தெலுங்கானா இரண்டும் ஒன்றாகவே இருந்தது அந்த நிலையில் விசாகப்பட்டினம் தெற்க்கில் வேட்பாளராக என்னை சந்திரபாபு நாயுடு நிறுத்தினார்.
இதனால் நான் விசாகப்பட்டினத்திற்கு சென்று வீடு, ஆபீஸ் என அனைத்திற்கும் அதிக அளவில் செலவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்தேன் அப்பொழுது என்னுடன் அமர்ந்திருந்த சந்திரபாபு நாயுடு விடம் விசாகப்பட்டினத்தின் எம்பி ஏதோ ஒன்றை அவரிடம் கூற அதற்கு சந்திரபாபு நாயுடு என்னை ஐந்து நிமிடம் வெளியே இருக்கும் படி தெரிவித்தார். நான் என்னால் காத்திருக்க முடியாது என்னை எப்படியும் நீங்கள் எம்எல்ஏ ஆகப் போவதில்லை எம்எல்ஏ சீட்டும் தரப்போவதில்லை எனக்கு தெரியும் என்று நான் மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டேன், அதற்குப் பிறகு 2018 ல் பிரதமர் மோடி மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பால் பாஜகவை இணைந்து தற்போது மறைமுகமாக சப்போர்ட் செய்து வருகிறேன் என்று சந்திரபாபு நாயுடு மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் கவிதா! பல வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்று இருந்தாலும் சமீபத்தில் நடிகை கவிதா சந்திரபாபு நாயுடுவை பற்றி கூறியிருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.