Cinema

இளம்பெண்ணுடன் தலையை காட்டாமல் தெறித்து ஓடிய விஷால்!.....இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

Vishal
Vishal

சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் தீர்க்கிக்கு வந்தவர் நடிங்கர் விஜய் தற்போது புரட்சி தளபதி என்ற பட்டத்துடன் சினிமாவில் வலம் வருகிறார். இவர் தெலுங்கானாவில் பிறந்தாலும் தமிழ் சினிமா மீது ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால். செல்லமே திமிரு, சண்டைக்கோழி ஆகிய படத்தில் நடித்து மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். விஷால் குறித்து அவ்வப்போது பல சர்ச்சைகள் வந்தன தற்போது அதே போல் நியூயார்க்கில் நடந்த சம்பவம் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்தினம் படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாக்கி வரும் படம் 2024ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உ;லிட்டா நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கல்யாணத்தை நோக்கி சென்ற போது இறுதியில் அந்த கல்யாணம் நின்றது, அதனால் விஷால் இது நாள் வரை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அவரது நண்பர்களான கார்த்திக், ஆர்யா ஆகியோர் திருமணம் முடித்து விட்டனர். மேலும், நடிகர் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை கட்டிவிட்டு தான் அடுத்து கல்யாணம் செய்து கொள்வேன் என்ற முனைப்பில் விஷால் பயணித்து வருகிறார். இந்நிலையில் விஷால் தொடர்பான வீடியோவை கண்ட நெட்டிசன்கள் காதலியுடன் செல்கிறார் என்றும் அது சரி எதற்காக ஓடினார் என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஒரு தரப்பு படத்திற்கான புரமோஷனில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும், விஷால் தான் காதலித்து வரும் பெண்ணுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறுகின்றனர். எதற்காக வீடியோ எடுத்ததும் விஷால் தலை தெறிக்க ஓடினார் என்பது குறித்து எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை அவருடன் சென்ற பெண் குறித்தும் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.