24 special

எல்லாத்தையும் மாத்து...... அறிவாலயத்திற்கு போன ரகசிய ரிப்போர்ட்!

mk stalin
mk stalin

மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த ஆட்சியில் திமுகவிற்கு எதிரான மற்றும் திமுக பின்னடைவை ஏற்படுத்தும் பல சம்பவங்களே அரங்கேறி உள்ளது என்பதும் தமிழக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுவதாகும்! ஏனென்றால் திமுக தன் கட்சிக்குள்ளையே பல குளறுபடிகள் மற்றும் சண்டைகளை எதிர்கொண்டு வருகிறது, எந்த ஒரு போட்டியிலும் ஒரு குழு ஒன்றாக போட்டியிட்டால் அந்த குழுவில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் ஒற்றுமையும் மிக முக்கியம் ஆனால் இங்கு திமுகவில் அது பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் திமுக தன் செல்வாக்கையும் இழந்து வருகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது வாக்குறுதி நிறைவேற்றாமல் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் சங்கங்களும் நேரடியாக போராட்டத்தில் ஈடுபடுவதும் தமிழக அரசே நோக்கி கேள்வி எழுப்புவதும் வாடிக்கையாகி உள்ளது.


இதற்கிடையில் திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல ஏற்பாடுகளை திமுக செய்து விளம்பரத்தை தேடியது ஆனால் அதுவும் பல வகையில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட போதிலும் எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டம் வராததும் திமுகவை நேரடியாகவே மக்கள் எதிர்க ஆரம்பித்து விட்டனர் என்ற விமர்சனத்திற்கு காரணமாக அமைந்தது. இதற்கிடையில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மக்களுக்காக தான் அமைச்சர் பதவி வகிக்கிறோம் என்பதை மறந்து பொது மக்களையும் தன் தொண்டர்களையும் பொதுவெளியில் உதாசீனப்படுத்தும் வகையில் பேசி அவமதித்து வந்ததும் செய்திகளில் வெளியானது.இதனை அடுத்து திமுகவின் முக்கிய தலைகள் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனையும் பெற்றுள்ளனர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவரும் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து பொன்முடி இதில் பதவியை இழந்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகப்படுத்தியது.

இப்படி தொடர் பின்னடைவு மற்றும் அதிருப்திகளை சந்தித்து வரும் திமுக 2024 ஆம் ஆண்டு புது வருடம் பிறந்தவுடன் ஜனவரியில் தொகுதி நிலைமை எப்படி இருக்கிறது என்பதை குறித்து ஆய்வு செய்து அறிக்கை கேட்டதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் மையப்படுத்தி தொகுதி சார்ந்த ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் திமுக இது வரை தமிழகத்தில் சந்தித்து வந்த அதிருப்திகள் பின்னாடைவுகள் குறிப்பிடப்பட்டு தேசிய அளவிலும் திமுகவின் பேச்சுகள் தோல்வியை கொடுத்திருப்பதும் பெரும் சர்ச்சையான காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மூன்று தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் அதுவும் சிரமம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாம்! இதனால் திடீரென்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவாலயத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டு எந்த ஒரு தொகுதியில் ஒரு அமைச்சர் தனது வெற்றியை நழுவ விடுகிறாரோ அவருக்கு அமைச்சர் பொறுப்பே பறிக்கப்படும் என்றும் ஒரு தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சனை ஏதாவது இருந்தால் அதையும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர்களின் மாவட்டம் - பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.