Cinema

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் விஜயை சீண்டிய சூப்பர் ஸ்டார்..!

Rajinikanth, Vijay
Rajinikanth, Vijay

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கலக்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்திற்கு சரியானவர் நடிகர் விஜய் என்று ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் விஜய் என்றே அழைத்து வந்தனர். இது ரஜினி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்த ரஜினியின் கடைசி படமான ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் ஒரு குட்டி கதை சொன்னது விஜயை மையப்படுத்தி தான் சொன்னார் என்று பேசப்பட்டது. இணையத்திலும் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் போட்டி போட்டு வந்தனர். தற்போது மீண்டும் ரஜினிகாந்த் விஜய் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.


கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இசைவெளியீட்டு விழாவில் காக்கா – கழுகு கதையை சொன்ன ரஜினிகாந்த் இதை யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது போல் பேசினார். அந்த கதை தளபதி விஜயை சொன்னதாக ஒரு பூகம்பம் கிளம்ப இதற்கு ரஜிகாந்த் விளக்கம் கொடுக்காமல் மௌனம் காத்து வந்தார். இது ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சாக்கடை சண்டையை போட்டனர். அதே வருடம் விஜயின் லியோ படத்தின் வெற்றி விழாவில் உதவி இயக்குனர் ரத்னகுமார் எவ்ளோ பெரிய கழுகா இருந்தாலும் பசிச்சா கீழ இறங்கித்தான் ஆகணும் என பேசினார். பின்னர் பேசிய நடிகர் விஜய்யும் காக்கா – கழுகு பற்றிய பேச்சை பேசிவிட்டு ஒரு ரவுண்டு சுற்றி வந்து சிரித்தது ரஜினிகாந்துக்கான பதிலடி என்றே பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். குறிப்பாக, இந்த படம் கடந்த ஆண்டு வெளியாக இருந்த நிலையில் படம் வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தள்ளிப்போனது. ஜெயிலர் பட வெற்றியை போல லால் சலாம் படமும் வெற்றி  பெற திட்டம் போட்டு வருகிறார். அந்த வகையில் அந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் மீண்டும் நான் சொன்ன காக்கா – கழுகு கதையை அப்படியே வேற மாதிரி திரித்து விஜய்யை தான் சொன்னேன் என கிளப்பி விட்டு விட்டனர். விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் என்னை சந்தித்த போது அவருக்கு 13 வயசு தான். எஸ்.ஏ. சந்திரசேகர் வந்து விஜய்யை என்னிடம் அறிமுகப்படுத்தினார். முதல்ல நல்லா படிக்க சொல்லுங்க அப்புறம் நடிக்க வரலாம்னு சொன்னேன்.

அதன் பிறகு விஜய் நடிப்பின் மூலம் வளர்ச்சியை கண்டுள்ளார், அவரையும் என்னையும் ஒப்பிட்டு பேசுவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு ரசிகர்களும் இப்படி மாற்றி மாற்றி விமர்சிப்பது நிறுத்தி கொள்ள வேண்டும். இது எனக்கும் கஷ்டமாக இருக்கிறது, விஜய்க்கும் கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து விஜய் அரசியலுக்கும் வரப் போவதாக சொல்றாங்க, இந்நிலையில், என்னையும் அவரையும் கம்பேர் பண்ணி பேசுவது சரியல்ல. அது என் மனசை ரொம்ப வேதனையடைய செய்கிறது. இப்படி செய்வதை தவிர்த்து விடுங்கள் என்று அன்பாக தெரிவித்து கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணையத்தில் விஜய் குறித்து இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ரஜிகாந்த் திடீரென்று விளக்கம் கொடுக்கா காரணம் லால் சலாம் படம் வெற்றி பெற விளம்பர யுக்தியாக பயன்படுத்துகிறார் என விமர்சனம் நெட்டிசன்கள் போட்டு வருகிறன்றனர். இதில் விஜய் அரசியல் வருவது குறித்து எதற்காக ரஜினி பேசுகிறார் வேண்டும் இரண்டு பேரும் மாற்றி மாற்றி தங்களை அடையாளப்படுத்தி வருவது வழக்கமாக கொடுள்ளனர் எனவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.