24 special

பெரியாரிஸ்டுகளுக்கு பலத்த அடி கொடுத்த சென்னை சில்க்ஸ் உரிமையாளர்!

mkstalin, ayothi
mkstalin, ayothi

பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியில் ராமாயண புராண கதையின்படி ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தியில் ஆட்சி அமைத்த பொழுது ராமஜென்ம பூமி தளத்தில் பாபர் மசூதியை கட்டினார். மன்னர் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தனர், இந்த முறையீடு 1850 இல் ஒரு வன்முறை சர்ச்சையாக வெடித்தது. பல புதிய இயக்கங்கள் இந்து மற்றும் இஸ்லாம் என இரண்டு தரப்பிலும் தொடங்கப்பட்டது. அதோடு நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்குரியது என்று இரு சமய தரப்பிலும் பதியப்பட்டது. இதனை அடுத்து வெடித்த சர்ச்சையால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது அதன் விளைவாக நாட்டில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களிடையே வகுப்புவாத கலவரங்கள் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் உலகின் மற்ற நாடுகளுக்கும் மற்ற துணை கண்டங்கள் முழுவதும் பரவி அங்கும் சில கலவரங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது. 


2005 ஆம் ஆண்டு ஜூலையில் அயோத்தியில் பாபர் மசூதி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் தற்காலிக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு குழந்தை ராமர் கோவில் என ராம பக்தர்கள் வழிபட்டு வந்தனர். முன்னதாக அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கோவில் அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டு 2019 உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு ஆலயம் அமைப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது இதனை அடுத்து 2020ல் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதற்குப் பிறகு அயோத்தியில் ராமர் கால கோவில் பார்த்து பார்த்து பல சிறப்பம்சங்கள் மற்றும் நுணுக்கங்களோடு பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டது. தற்போது இந்த கோவில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்களின் கனவாக எழுந்து நிற்கிறது.மேலும் ஜனவரி 22 இல் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நிறைவு பெற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது அன்றிலிருந்து பாலராமரை பார்ப்பதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டே வருவதாக செய்திகள் வருகிறது.

மேலும் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்ட ஐந்து நாட்களில் 13 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோவிலில் பால ராமரை தரிசித்துள்ளனர் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிரபல தனியார் கடையான தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் இயக்குனர் நந்தகோபால் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தருணம் குறித்து பத்திரிக்கையாளர் மத்தியில் பகிர்ந்துள்ளார். அதாவது அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு இந்தியாவின் பல துறைகளில் முன்னணியில் திகழும் நபர்கள் வந்தனர் அதில் நானும் பங்கேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். ராமர் கோவில் அமைந்துள்ள இடம் முழுவதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தது! மேலும் நான் அயோத்தி விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து நிகழ்ச்சிகள் பங்கேற்கும் வரை செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்துமே மிகச் சிறந்த முறையில் இருந்தது. இதற்கு முன்பாகவும் நான் அயோத்திக்கு வந்திருக்கிறேன் ஆனால் அப்பொழுது சிறிய வீதியில் சென்றேன் தற்பொழுது அதே அயோத்தி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.